மே-4 தேர்தல் ரிசல்ட்க்கு எப்படி நாடே வெயிட் பண்ணுதோ..அதேபோல இந்தப்படத்தின் ரிசல்ட்க்கும் பல விழிகள் தூங்காமல் வெயிட் பண்ணிச்சிது. ஏன்னா படத்தோடு ட்ரைலர் செஞ்ச சம்பவம் அப்படி! சரி படம் எப்படி இருக்குன்னு பார்த்திடலாமா?
ஹீரோ நட்டி வடநாட்டுல இருந்து வயிற்று பிழைப்பிற்காக சென்னை வருகிறார். நடிகராக உயர முயற்சிக்கிறார். அவரை திரையில் கவனிக்கும் தம்பி ராமையா, “நீதான்டா அடுத்த எம் ஜி.ஆர்” என நட்டியிடம் சொல்கிறார். நட்டிக்கு பெரிதாக அரசியல் ஆர்வம் இல்லாவிட்டாலும், ஒரு கட்டத்தில் அவருக்கு ஆசை துளிர்விடுகிறது. அப்புறம் என்ன? கட்சி துவங்கும் வேலையில் நட்டி ஈடுபட அடுத்தடுத்து என்னென்ன சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது படத்தின் மீதிக்கதை
நடிகராக நட்டி இப்படத்தில் அசத்தியுள்ளார். படமெங்கும் அவரிடம் ஒரு எனர்ஜி இருந்ததை கவனிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர், விஜய், ரஜினி ஆகிய மூவரின் பாடிலாங்வேஜையும் ஆங்காங்கே தனக்குள் கொண்டு வந்துள்ளார். அதில் ரஜினி மேனரிஜம் தான் பெர்பெக்ட்! நாயகிகள் சாந்தினி உள்பட சிலர் இருந்தாலும் யாருக்கும் பெரிதாக வேலையில்லை. நட்டியை அரசியல் வாதியாக படத்தில் தூக்கி சுமப்பதைப் போலவே படத்தையும் தம்பிராமையா தூக்கிச்சுமந்துள்ளார். அவரின் அரசியல் பன்ச்கள் எல்லாமே அதகளம். ஊர் ஸ்லாங்கில் எம்.எஸ் பாஸ்கர் அசத்தியுள்ளார். இளவரசுவும் அவர் பங்கிற்கு ஆங்காங்கே பட்டாசு கொளுத்தியுள்ளார். தலைவாசல் விஜய், உள்ளிட்ட மற்றும் பலரும் இந்தக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்
தர்புகா சிவா பின்னணி இசையை சிறப்பாக அமைத்துள்ளார். பாடல்களிலும் ஒரு கொண்டாட்டத்தை உணர முடிகிறது. ஒளிப்பதிவாளர் ஷாட் டிவிஷன்களை பக்காவாக யோசித்து கம்போஸ் செய்துள்ளார். நைஸ்!
தம்பி ராமையா ட்ரெண்டில் இருக்கிறார் என்பது அவரின் கதை தேர்விலும், வசனங்களிலும் பக்காவாக தெரிகிறது. வசனங்களில் பல இடங்களில் “விசில்” கன்பார்ம்! உமாபதி ராமையாவின் திரைக்கதை நம்மை படம் பார்க்கும் போது போன் பார்க்க விடவில்லை. அந்தளவிற்கு திரைக்கதையில் நேர்த்தி இருந்ததை கவனிக்க முடிந்தது. மேக்கிங் it’s Good!
பின்பாதி பினிஷிங்கில் இன்னும் ஆழம் இருந்திருக்கலாம் என்றாலும் துளியும் நம்மை உற்சாக குறைவின்றி பார்த்துக்கொண்ட வகையில் இந்தத்திரைப்பட கூட்டணிக்கு நம்பி நாம் வாக்களிக்கலாம்!
3.5/5
-வெண்பா தமிழ்

