418- விமர்சனம்

ப்யூர் பேய்படம் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு யார்னா சொல்லிருப்பாங்க போல. அதை கபக்னு பிடித்து பேயாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர் கிர்தான் நாடகெளடா

ஒரு மருத்துவக்கல்லூரியில் 418 ரூம் மட்டும் டேஞ்சர் ஜோனில் வைக்கப்படுகிறது. அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறான் ஒரு மாணவன். ஆனால் அவன் காணும் அமானுஷ்யங்களை அவனைத் தவிர்த்து யாருமே நம்பவில்லை. ஆனால் அவன் தேடலில் தீவிரம் காட்ட ஒரு கட்டத்தில் 418-ஆம் அறையின் மர்மம் வெளி வருகிறது. அதன் பின் அந்த அறையிலுள்ள பேயின் முன்பின் வரலாறே கதையாக விரிகிறது

வன்மத்தை நெஞ்சில் ஏற்றி அதைக் கண்களில் வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார் சைத்ரா ஆச்சார். அவரின் நடிப்பே படத்தின் பலம். சேரன் லக்காராஜு, சூர்யா ராஜ் வீரபத்தினி, ப்ரீத்தி, ஷஷாங் பாட்டில், ஸ்ரீ வைஷ்ணவ் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் ஆகத்தரமாக நடித்துள்ளனர்

வெங்கி ஜிஜி தனது இசையில் நல்ல ஹாரர் மிஸ்ட்ரியை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் தனது மொத்தத் திறனையும் இதில் இறைத்துள்ளார். மிகச்சிறந்த ஷாட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளது

இயக்குநர் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு ஹாரர் அனுபவத்தை கொடுத்துள்ளார். சிற்சில இடங்களில் ஆழமற்ற காட்சிகள் இருந்தாலும் over all ஒரு OK படமாக இருக்கிறது இந்த 418
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *