Lik- விமர்சனம்

காதலின் அளவை கருவியால் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது லல் இன்சூரன்ஸ் கம்பெனி

2040-ல் எஸ்.ஜே சூர்யா ஆண் பெண்ணுக்குள் இருக்கும் காதலின் அளவை கண்டுபிடிக்கும் செயலியை உருவாக்குகிறார். அது பல காதலர்களின் விருப்பமாக இருக்கிறது. ஒருநாள் ஹீரோ PR வாழ்வில் அந்த App ஆப்பாக மாறுகிறது..அதனால் அந்த செயலியை செயலிழக்கச் செய்ய முயற்சிக்கிறார் ஹீரோ பிரதீப் ரங்கநாதன். அவரின் முயற்சி என்னானது என்பது படத்தின் மீதிக்கதை

நான்காவது படத்தில் 32 அடி பாய்ந்துள்ளார் பிரதீப். காமெடி எமோஷ்னல் ஆக்சன் என எல்லா ஏரியாவிலும் அதகளம் செய்துள்ளார். கீர்த்தி ஷெட்டி அழகாக இருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் மீது நமக்கு பெரிய ஈர்ப்பு ஒன்றும் வரவில்லை..எஸ்.ஜே.சூர்யா வழக்கமான நடிப்பை தந்துள்ளார். அது அலுப்பூட்டவில்லை என்பது ஆறுதல். ஆர்கானிக் சிறைச்சாலை வைத்திருக்கும் சீமான் கேரக்டரில் ஆழமில்லை..அதனால் அவரது பெர்பாமன்ஸில் மேஜிக் நிகழவில்லை. அப்பா மகனுக்கான கெமிஸ்ட்ரி காட்சிகள் ஒகே! கெளரி கிஷன் ஓரளவு தனது கேரக்டரை தேற்றியுள்ளார். ஆனந்தராஜ் உள்பட ஏனைய ஆர்டிஸ்ட்ஸ் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்

படத்தின் ஒளிப்பதிவு ஆகத்தரமாக அமைந்துள்ளது. 2040-ல் கதை நடப்பதால் ஸ்கிரீனில் வண்ணங்கள் விளையாடுகிறது. அனிருத்தின் இசை படத்தின் மற்றொரு ப்ளஸ். நீமா நீமா பாடல் உள்பட மற்ற பாடல்களும் நல்ல வைப்

டெக்னிக்கல்லி அனைவரையும் நன்றாக ஒருங்கிணைத்து கேப்டன்ஷிப்-ஐ திறமையாகச் செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தொழில்நுட்பத்தில் சீறிப்பாய்ந்த படம் ரைட்டிங் ஏரியாவில் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம். சீமான் செல்போனை புறந்தள்ளுவதற்கான காரணத்தில் நமக்கு கனெக்ட் ஏற்படவில்லை.. கீர்த்தி பிரதீப் காதல் நமக்கு ஒருவித பிணைப்பை உருவாக்கவில்லை என்பது சின்ன Fall தான்.

But அன்பு என்பதை அகம் அளவிட வேண்டும்..அதால் தான் முடியும் என்று சொன்ன ஒரு குட்டி மெசேஸுக்கு lik-க்கு லைக் போடலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *