சட்டமும் நீதியும்2- விமர்சனம்

முதல் பாகத்தில் கொடுத்த நேர்த்தி இந்த பாகத்தில் கூடி வந்துள்ளதா?

வரலெட்சுமியின் கணவன் சுட்டுக்கொல்லப்படுகிறார். கொலை செய்த போலீஸ்காரர்களுக்கு தண்டனை வாங்கித்தர போராடுகிறார் வரலெட்சுமி. ஆனால் போலீஸ்காரர்கள் கொலை செய்யவேயில்லை என வாதாடுகிறார் சரவணன் உண்மையான கொலையாளி யார்? என்ற கேள்வியை நோக்கி பரபரப்பாக நகர்கிறது தொடர்

சென்ற பாகத்தில் கொடுத்த அசத்தலான நடிப்பை இந்தப்பாகத்திலும் கொடுத்துள்ளார் சரவணன். வரலெட்சுமி தரமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் டிப்பார்ட்மெண்ட் ஆட்களாக வரும் கவிதா பாரதி, ஆறுபாலா உள்ளிட்ட அனைவரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர். எல்லாக் கேரக்டர்களுக்கும் நல்ல ரைட்டிங் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ்.

சீரிஸில் இருக்கும் பரபரப்பிற்கு உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர். ஒளிப்பதிவாளர் சிக்கமான காட்சிகளையும் நல்லவிதமாக காட்ட முயற்சித்துள்ளார்

பொதுவாக இப்படியான கதையில் காவல்துறையை கறைபடிந்த துறையாகவே காட்டுவார்கள். ஆனால் அந்தத்துறையில் உள்ள பாசிட்டிவ் விசயங்களை காட்டியுள்ளார் இயக்குநர். அதற்காகவே அவரைப் பாராட்டலாம். மேலும் ஒவ்வொரு எபிசோடிலும் இன்ட்ரெஸ்டிங்கான விசயங்களை அழகாக தூவியுள்ளார். நிச்சயமாக சட்டமும் நீதியும்-2க்கு ஒருமுறை நேரத்தை செலவிடலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *