HOPE (ஹோப்)- விமர்சனம்

கொரியாவில் இப்படியும் படமெடுத்து மிரட்டுவார்களா? என வியக்க வைத்த படம்

Ko Bum-seok ஒரு காவலதிகாரி. ஒரு கிராமத்தில் ஒரு மாடு இறந்து கிடக்கிறது. அதை துப்பு துலக்கச் செல்லும் Ko Bum-seok-க்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. மாடு போலவே மனிதர்களும் அங்கு இறந்து கிடக்கிறார்கள்.
இந்த மரணங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய மிருகம் இருக்கிறது. அதை Ko Bum-seok நாயகி Im Sung-ae துணையோடு எப்படி அழிக்கிறார் என்பதே கதை

நடிகர்களின் நடிப்பு படத்தின் பெரிய ஹோப்! அதை அத்தனை பேரும் துல்லியமாகச் செய்துள்ளனர். மிருகத்தின் முன்னால் பயந்தும் துணிந்தும் மோதும் Im Sung-ae மற்றும் Ko Bum-seok இருவரும் அசத்துகிறார்கள். ஏனைய நடிகர்களும் அசத்தியுள்ளனர்

படத்தின் உணர்வுகளை சிதைக்காத வண்ணம் தமிழில் வசனங்கள் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் Michael Abels ஆகத்தரமான பின்னணி இசையைத் தந்துள்ளார். ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்

இயக்குநர் Na Hong-jin எமோஷ்னலையும் ஆக்சனையும் கலந்து பெரு விருந்து படைத்துள்ளார். நிச்சயமாக தியேட்டருக்குச் சென்று பார்க்கும் அளவில் வொர்த்தாக இருக்கிறது படம்!

3.5/5
-வெண்பா தமிழ்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *