தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை- நூல் விமர்சனம்

“ஒரு கதை எழுதவிருப்பதைப் பற்றி ஒரு அண்ணனிடம் பேசும் போது, ”

“இதைப்படிச்சுட்டு நீ சொன்ன கதையை எழுது” என்றார். காஞ்சிபுரத்தில் கைலாங்கடை வியாபாரம் பார்க்கும் காலத்தில் ரகசியமாய் சில மஞ்சள் புத்தகங்களை வாசித்து பித்தேறி திரிந்ததுண்டு. பின் ஒருமுறை ஒரு படத்தின் ஷுட்டிங்கிற்காக எட்டு மணி நேரம் பயணிக்க இருந்த சமயத்தில் கோயம்பேடில் காமசூத்ரா நூலை வாங்கி முழுவதும் படித்த வரலாறும் நமக்குண்டு. அதனால் இந்த நூலைப் பெரிதாகச் சட்டை செய்யவில்லை..கிட்டத்தட்ட சிட்டுக்குருவி லேகியம் போல எதையாவது சொல்லி வச்சிருப்பான்கள் என்றே வாசிக்கத் துவங்கினேன்..

“பாலுறவு வேறு பாலின்பம் வேறு என்று துவங்கியப் புத்தகம் பாலின்பம் நடத்தும் உளவியல் மாற்றங்களையும் எதிர்பாலினத்தின் தேவையை அறியும் நுட்பத்தையும் மிகச்சிறப்பாக விவரித்து அசத்தியது. மேலும் குடும்ப அமைப்பு மேம்பட பாலியல் அறியாமை அகற்றப்பட வேண்டும் என்பதை மிக காத்திரமாக எடுத்துரைத்தது. ஒரு தம்பதிக்கு பத்து லட்சம் லாட்டரி அடித்தால் அது இருவருக்கும் இன்பம். ஆனால் பாலுறவில் ஒருவருக்கான இன்பம் மட்டும் மற்றொருவருக்கானது இன்பம் ஆகாது என்பதை நெத்தியில் அடித்துச் சொல்லியுள்ளது. மேலும் ஆண்களிடம் உள்ள பலவீனங்களையும் பலவீனங்களை ஒத்துக்கொள்ளாத மனநிலையையும் வெறுமனே குத்திக்காட்டாமல் அவற்றைத் தகர்த்துக் கொள்ளும் வழியையும் வழங்கி இருக்கிறது தந்த்ரா.

காமத்தை ச்சீ அசிங்கம் என்றால் குழந்தைப் பிறப்பதையும் அசிங்கும் என்பதாகும் என்ற கூற்றை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அந்தரங்கத்தில் எது தேவை என உணர்ந்து செயலாற்றும் போது அங்கு ஓர் சேவையன்பு துளிர்க்கத் துவங்கிடும். அந்த அன்பு…அதாவது காமம் சார்ந்து கணவன் மனைவியிடையே பீறிடும் அன்புக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதை தக்க சாட்சிகொண்டு நிறுவும் தந்த்ரா ஆணினம் வாசிக்க வேண்டிய பொக்கிசம்.

வாழ்க்கை என்பது கொண்டாட்டத்திற்கானது ….எங்க பெரியப்பா ஒருத்தர் சொல்வார்…”குடும்பங்கள்ல நிறைய சமாதானம் கால்வளுக்கு இடையே இருக்குல. அதைச் சரியா கையாண்டா எல்லாம் சரியாயிடும்”பார்.

அதை ஏமாற்று வித்தை என்று கடந்துபோயிட முடியாது. அதே சமயம் அதை வைத்து மட்டுமே பிழைப்பு நடத்த முடியாது. பெண் முன்னாடி ஆணோட ஈகோ உடையுறது ரொம்ப கஷ்டம் தான். ஆனா அதைக் கஷ்டப்பட்டு உடைச்சிட்டா…அடுத்து எதிலுமே கஷ்டம் இல்ல. அந்த ஈகோவை எப்படி உடைக்கலாம் என்பதற்கு இந்த நூலைப் பரிந்துரைக்கிறேன்❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *