எது தர்மம்? – நூல் விமர்சனம்

நூலின் 208-ஆம் பக்கத்தில் சுகி சிவம் இப்படிச் சொல்கிறார்

“என்னை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தங்கத்தேர் அவசியமேயில்லை. எல்லாக் கோயிலுக்கும் பொதுவாக ஒரேயொரு தங்கத்தேர் வைத்துக் கொள்ளலாம். மாசிமாதம் இந்த ஊரில் இழுத்தால் பங்குனி மாதம் அந்த ஊரில் இழுப்பதற்கு அதே தேரை அனுப்பி வைக்கலாம்”

இந்து மதம் முன் வைக்கும் பத்து வகை தர்மம் குறித்தும், 32 வகை அறங்கள் குறித்தும் அக்குவேறு ஆணிவேறாக கூறிய சுகி சிவம் அவர்கள், புத்தகத்தை முடிக்கும் போது தெய்வங்கள் பெயரைச் சொல்லி பெரிய பெரிய ஆலயங்களில் மூட நம்பிக்கையோடு கொண்டு போய் கொட்டுவது தர்மமல்ல. சக மனிதனின் கண்ணீரை துடைப்பது தான் தர்மம் என்று முடிக்கிறார். ஒரு ஆன்மிக பேச்சாளரிடமிருந்து இப்படியான வார்த்தைகள் வெளிவருவது எவ்வளவு ஆரோக்கியமானது. சுகி சிவம் அவர்கள் சொல்வது போலவே, “60 வயதுக்குப் பின் வாழ்வைப் பற்றிய பெரிய புரிதல் வரத்தான் செய்யும்போல. (வரவேண்டும்) வெயிட் பண்ணிப் பார்க்கணும்

சுகி சிவம் அவர்களின் பேச்சிலும் எழுத்திலும் தெறித்து விழும் எதார்த்தம் தான் பேரழகு. இந்த நூலிலும் அது நிரம்பிக்கிடக்கிறது

சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதை விட பெரிய தர்மம் ஒன்றுமில்லை என்கிறார். எத்துணை பெரிய உண்மை🤍

அப்புறம் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கொஞ்சம் பணம் சார்ந்து தெளிவாக இருந்தால், சமூகத்தில் சிலர் பதற்றமடைகிறார்கள். அய்யோ இலக்கியம் பேசுபவன் இவ்ளோ காஸ்ட்லியா வாழலாமா?” எனப் பதறுகிறார்கள். அதற்கு சுகி சிவம் அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் செம்ம!

நல்ல சிந்தனையைப் விதைத்து சமூகத்தை சற்றேனும் மேம்பட உதவும் கலைஞன் கஞ்சிக்கி வழியில்லாமத் தான் கெடக்கணுமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *