“நான் அறிவுநேர்மை உள்ளவன்” என்ற எண்ணத்தில் ஆணவச் செருக்கு வந்துவிடுகிறது. ஆணவமுள்ள இடத்தில் அன்பு தொலைகிறது. அன்பை தொலைக்காதிருத்தலே புத்திசாலித்தனம் எனக்கொள்ள முடியும்.
நினைவாற்றலுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் இடையிலுள்ள நுண்ணிய வேறுபாட்டை நுட்பமாக பேசியுள்ளார் ஓஷோ. கவனிக்கவும் பேசிதான் உள்ளார் எழுதவில்லை. யெஸ் ஓஷோவின் நூல்கள் எல்லாமே அவர் பேசியவை தான். அதைத்தான் அவரது சீடர்கள் நூல்களாக வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலை சுவாமி சியாமானந்த் நன்றாக மொழி பெயர்த்துள்ளார்.
ஓஷோ நூல் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். நிச்சயமாக வாசித்தபின் அது பல திறப்புகளைக் கொடுக்கும்
தோழியோ, காதலியோ யாரையேனும் நாம் ஆழ்ந்து நேசித்தால் நிச்சயமாக ஒரு பிரிவு நேர்ந்தே தீரும் என்கிறார் தலைவர். அதற்காக எப்படியும் பிரிந்து விடுவோம் என்ற எண்ணத்தோடு பழகமுடியாதல்லவா? என்றாலும் மனதின் சிறு ஓரத்திலாவது “நிரந்தரமின்மை” என்ற எதார்த்தத்தை போட்டு வைக்கவேண்டும். அது பின்னாளில் நம்மைப் போட்டுத் தாக்குவதிலிருந்து காப்பாற்றும்
ஒரு அறையில் வெளிச்சம் தேவை என்றால் சுவிட்சை தட்ட வேண்டும். இருள் தேவை என்றாலும் சுவிட்சை தான் தட்ட வேண்டும். சுவிட்சின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் ஒளி போல நாம் மனதை கைக்கொள்ள பழக வேண்டும் என்கிறார் ஓஷோ. மனதிற்கு நாம் எஜமானாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் மனதை கவனிக்க வேண்டும். அதுவொன்றும் அவ்வளவு எளிதல்ல. அதைச் சாத்தியப்படுத்தத் தான் தியானம் தேவை என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் தலைவர்
மேலும் ஓஷோ எல்லா நூல்களிலும் சொல்லி வரும் ஒரு விசயம் இந்நூலிலும் உள்ளது
“கடந்த நொடியை, வரவுள்ள நொடியை தூரமாக வையுங்கள்.இந்த நொடியை வாழுங்கள்.. நொடிக்கு நொடி வாழுங்கள்🤍

