90-களில் சக்கைப்போடு போட்ட நாவல். கருப்பசாமி சொல்ற வாக்கை நிஜமா பொய்யா என்று சீர் தூக்கிப்பார்க்காமல் அப்படியே தூக்கிப்பிடிக்கும் கிராமம் ஒன்று. அங்குள்ள பெண் ரத்னா பெரிய மருத்துவமனையில் வேலை செய்கிறாள். அவளுக்கு அர்விந்த் என்ற மருத்துவர் மீது காதல் வருகிறது..அந்தக் காதலுக்கு அவளது தோழி ரீனா சப்போர்ட் செய்கிறாள். ரத்னா கருப்பசாமியிடம் உத்தரவு கேட்கிறாள். கருப்பு காதலுக்கு மறுப்புச் சொல்லவும் ரத்னா காதலை விலக்கிக் கொள்கிறார். அர்விந்த் அப்செட் ஆகிறார். ஆனால் ரீனா, கருப்பசாமி குறித்து அறிய ரத்னாவின் கிராமத்திற்குச் செல்கிறாள். அங்கு பேய் பூதம் ஆவி சாமி என பல குழப்ப கும்மாங்குத்து நடக்கிறது. முடிவில் கருப்பு நிஜமாகவே காதலை தடுக்கிறாரா? இல்லை கருப்பு பெயரைச் சொல்லி ஆசாமிகள் நடத்தும் நாடகமா என்பதை நோக்கி நாவல் பறக்கிறது . ரொம்ப பழகிய பழைய எழுத்தாக இருந்தாலும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைய பரபரப்பாக நகர்த்தியுள்ளார்
முழு நம்பிக்கை மூட நம்பிக்கை இரண்டையும் மிக அழகாக பேலன்ஸ் செய்துள்ளார் இசெ
ப்ரெஷ்-ஆன கதையில்லை. ஆனால் கொஞ்சம் ரீ பிரஷ் ஆக உதவும்

