பர்ஸ்-ஐ அடிச்சுட்டு எஸ் ஆகுற ஹீரோவோட சிம்பிள் கதையை சற்று மெனக்கெட்டு நிறைய காமெடி லேயர்ஸைச் சேர்த்து காஸ்ட்லியாகச் சொல்லியிருக்கிறார்கள்
மலேசியாவில் விஜய்சேதுபதி யோகிபாபுவிடம் தஞ்சம் அடைகிறார். யோகிபாபு வீட்டருகே ஹீரோயின் வீடு. ஹீரோயின் மீது விசே லவ்வாகிவிட, ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. பிரச்சனையைச் சரிசெய்ய விசே கொள்ளை அடிக்கிறார். அந்தக் கொள்ளைக்குப் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை
படத்தில் ஷார்ப்பான கேரக்டரும் இல்லாமல் ஷாப்ட் ஆன கேரக்டரும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவிலான கேரக்டர் விஜய்சேதுபதிக்கு. கூடுமான வரை தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவர் சிரிக்காமல் டயலாக் பேசாமல் ஸ்கோர் செய்யும் காட்சிகள் இருக்கிறதே அடடா! வெல்டன் விசே ப்ரோ! ஹீரோயின் அழகாக இருக்கிறார். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்துள்ளார். யோகிபாபு கிட்டத்தட்ட படத்தின் செகண்ட் ஹீரோ. சில இடங்களில் கன கச்சித கமெண்ட்களால் சிரிக்க வைக்கிறார். தர்மா கேரக்டரில் வரும் வில்லன் interesting..அவரது டிரைவர் கேரக்டர் செம்ம interesting. பப்லு காட்டும் வில்லனத்தனம் ஷார்ப்
படத்தின் பின்னணி இசையில் நல்ல மைலேஜ் உள்ளது. சாம். சி எஸ் வழமை போல் பின்னணி இசையில் ஜோர். ஒளிப்பதிவாளர் தனது வேலையில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஒரு சேஸிங் காட்சி தரம். சண்டைக்காட்சிகளை இன்னும் வலிமையோடு அமைத்திருக்கலாம்.
மலேசியாவில் காதல் கதை போல படம் துவங்குகிறது. முதல் முப்பது நிமிடத்தில் படத்திற்குள் நாம் சென்று விடுகிறோம். அதன்பின் சூதாட்டம், நாயகனைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை என கதை வேறோர் ரூட் பிடிக்கிறது. அந்த ரூட்டில் காமெடி காட்சிகளைச் சிறப்பாக அமைத்துள்ளார் இயக்குநர்.. ஆறுமுககுமார்
இன்னும் சற்று மெனக்கெடலுடன் திரைக்கதை அமைத்திருக்கலாம். என்றாலும், படத்தில் தொய்வு என்பதில்லை. குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தைய இருபது நிமிட சீக்வென்ஸ் அருமையாக அமைந்துள்ளது. சின்னதாக கண்டிசன் அப்ளே இருந்தாலும், இந்தக் கொளுத்தும் வெயிலுக்கு ஒரு குளுகுளு அனுபவம் இந்த Ace.
3/5
-வெண்பா தமிழ்

