ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம்

இலக்கிய இளைப்பாறுதல். தீவிரமான நூல்களை வாசித்து வந்ததால் சின்னதாக ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வென்றால் வாசிப்பிற்கு அல்ல. வாசிப்பிலே ஒரு ஓய்வு. அதனால் அய்யா இந்திர செளந்தர்ராஜனை தேர்ந்தெடுத்தேன். இண்டு பேப்பர், விகடன் இதழ், பில்டர் காபி, வாங்கோ போங்கோ உரையாடல் என நாவலெங்கும் அக்ராகாரம் தான். ஆனாலும் நாவலை விரைந்து வாசிக்க வைத்தது அவரின் எளியநடை. அவள் விகடனில் தொடராக வந்த நாவலாம் இது. 24 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த நாவல் இப்பவும் ஒரு பக்கா டிவி சீரியல் மெட்டிரியல். எனக்கு இந்த நாவலில் பிடித்த விசயம் மீனாட்சி என்ற 60 வயது நிரம்பிய பெண் கேரக்டரை படைத்த விதம்

பெண் பித்தம் கொண்ட சினிமா தயாரிப்பாளரான கணவனை உதறிவிட்டு இரண்டு பிள்ளைகளோடு தனிவாழ்விற்கு வருகிறாள் மீனாட்சி. 20 வருடங்கள் கழித்து திருமணம் முடித்த மகனோடு வாழ முடியாத சூழலில் ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் பணியாளாக குடியேறுகிறாள். மகன் அம்மாவைத் தேடி அலைகிறான். அவன் மனைவி ரஞ்சனிக்கு விசயம் தெரிந்தும் மறைக்கிறாள். மேலும் மீனாட்சியின் மகளோடு நாத்தனார் உறவை பலப்படுத்தி, மீனாட்சி பிரிந்து வந்த அவள் கணவரின் சொத்துக்கு ஆசைப்படுகிறாள் ரஞ்சினி.

மீனாட்சி ஆஸ்ரமத்தில் நடக்கும் சீரியலில் நடித்து பின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகிறாள். எந்த இடத்திலும் சுயத்தை இழக்காமல் சமயோசிதமாக செயல்படும் மீனாட்சி கேரக்டரை அவ்வளவு ரசிக்கலாம். நிறைய க்ளிசே காட்சிகளும் வசனங்களும் நாவலெங்கும் இருந்தாலும், “சூர்யவம்சம் படத்தை இப்போதும் பார்த்து பரவசம் அடைபவன்” என்பதால் எனக்கு இந்த நாவல் ரொம்ப பிடித்தது😎😎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *