ஜமா கொடுத்த பாரி இளவழகன் கமா போட்டு தன் வெற்றியைத் தொடர்கிறாரா?
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் வாழும் நடுத்தரவர்க்கத்து இளைஞன் பாரி. அவரின் அம்மா ரோஜா மிகவும் சாதிப்பற்று கொண்டவர். அவர் தன் மகனுக்கு தன் சாதியிலே திருமணம் முடிக்க நினைக்கிறார். ஆனால் நம் ஹீரோ ஆங்கிலோ இண்டியன் பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலிக்கிறார். எட்டு வருடமாக தவமிருந்த காதலிலும் பிரச்சனை, காதலாலும் பிரச்சனை என கதை நீ…..ள்கிறது. முடிவில் ஹீரோ தன் காதலை கண்டினியூ செய்தாரா.. அம்மா ரோஜாவை கன்வின்ஸ் செய்தாரா? என்பதே கதை
பாரி இளவழகன் சிறப்பாக நடித்துள்ளார். மிகவும் எதார்த்தமான நம்ம வீட்டுப்பையன் தோற்றம் அவருக்குப் பக்காபலம். நாயகி ரம்யா ரங்கநாதன் அச்சு அசல் ஆங்கிலோ இண்டியன் லுக்கில் அசரடிக்கிறார். பொண்ணுக்கு நடிப்பும் செம்மயா வருது. சேத்தன் எல்லா நடிகர்களையும் ஒவர்டேக் செய்து நடித்துள்ளார். ரோஜாவை திரையில் பார்த்து ரொம்ப நாட்களாகிவிட்டது. பின்னியிருக்கிறார். பரிதாபங்கள் கோபியின் அந்த மாடுலேசன் ஆரம்பத்தில் பெரிதாக வொர்க் ஆகாவிட்டாலும் போகப்போக செட்டாகிவிடுகிறது. க்ளைமாக்ஸில் அவரும் அசத்திவிட்டார். ஏனைய எல்லா நடிகர்களும் ஷார்ப்
ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்டின் கேமரா பெரம்பூரை நம் முதல்வர் விஜயை விட அதிகமாக சுற்றியிருக்கும் போல. இண்டு இடுக்கையெல்லாம் அச்சு அசலாக காட்டியுள்ளார். பரத் சங்கர் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே செம்ம வைப்
ரொம்ப சிம்பிளான கதையை ஹிட் மெட்டிரியலாக மாற்ற திரைக்கதையில் அதிகமாக மெனக்கெட்டுள்ளார் பாரி இளவழகன். படத்தில் அவரது கேரக்டரில் சின்னதாக ஒரு நிலையற்ற தன்மை இருப்பதை தவிர்த்திருக்கலாம். சிற்சில இடங்களில் எமோஷ்னல் ஷிப்டிங் இருப்பதும் நெருடல். இவ்விரண்டையும் நாம் முழுமையாக மறக்கும் அளவிற்கு க்ளைமாக்ஸில் ப்ளாஸ்ட் செய்துவிட்டார்கள். பல இன்ட்ரெஸ்டிங்கான சம்பவங்களும் படத்திலுள்ளது.சந்தடி சாக்கில் சாதிப்பெருமைக்கு ஒரு சாட்டையடி கொடுத்தது வேறலெவல் சம்பவம்
ஆக “வா அன்பே” என இந்த அன்பே டயனாவை டாவடிக்கலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

