ப்ரம்மா – சுயம்புகளின் கதை

1990-களின் இறுதியில் நடக்கும் கதை. தூர்தர்சன் சேனல் ஒன்றே சொர்க்கம் என்று வாழ்ந்த தலைமுறைக்கு, கேபிள்டிவி அறிமுகம் ஆன காலம். கதையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சேட்டிலைட் முதலாளிகள், ரவுடிகள் ஆகியோர் வருகிறார்கள். அடக்கி வைக்க நினைக்கும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் ஒருபோதும் தன் அதிகாரத்தை சரிபாதியாக பங்குபோட நினைப்பவனை வாழ விடமாட்டார்கள். கதையின் க்ளைமாக்ஸ் அதை நச்சென உணர்த்துகிறது.

தொழில் தனிப்பட்ட வாழ்வு என எல்லாவற்றிலும் ஈகோ தான் முதல் ரோல்ப்ளே செய்யும். இந்தக் கதையிலும் ஈகோயிசத்தை கன கச்சிதமாக கதைக்குள் கொண்டுவந்துள்ளார் கேபிள்சங்கர்

சுந்தர் என்ற சாமானியன் நிறைய ஆபரேட்டர்களை உருவாக்கி அவர்களை தன்னோடு இணைத்து கேபிள் தொழிலைத் துவங்குகிறான்.. அவனுக்கு ஒரு காதலி, ஒரு நண்பன் அப்பா அம்மா. தன் கனவின் இலக்கை நோக்கி அவன் பயணப்படும் போது கொக்கிகுமார் என்ற ரவுடி அவனின் தொழிலில் பங்கு கேட்கிறான். சுந்தர் அதைத் தன் சாதுர்யத்தால் சமாளிக்கிறான். ஆனால் துணை முதல்வரின் மகன் மனுஷ் சேட்டிலைட் சானல் துவங்க, சுந்தர் தன் நெட்வொர்க் மொத்தத்தையும் மனுஷிடம் விற்கும் சூழல் வருகிறது. மேலும் கொக்கி குமார் உடனான பகையும் வளர, சுந்தர் அந்தப் பிரச்சனைகளை எப்படி கேண்டில் பண்ணான் என்பதையும், ஒரு வளரும் சேனல் நெட்வொர்க்கிற்குப் பின்னால் எவ்வளவு ரத்தம்,துரோகம், வலி, தியாகம் இருக்கிறது என்பதையும் மிகத்தரமான கதையாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.

இந்த நாவலைப் படமாகவோ, வெப்சீரிஸாகவே எடுத்தால் பேப்பர் வொர்க் என்பதை பத்து நாட்கள் பார்த்தாலே போதும். Yes நாவலை ஷுட்டிங் ஸ்கிப்ட் போலவே எழுதியுள்ளார்.

ஒரு படத்தை நல்ல படம் என்று முடிவு செய்வது அந்தப் படத்தின் கேரக்டர்கள் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை வைத்து தான். இந்த நாவலில் நிறைய கேரக்டர்கள் அத்தனை காத்திரமாக எழுதப்பட்டுள்ளது.

சுந்தர், மனுஷ், சிவா, அப்துல், ஷியாம், உஷா, கொக்கி குமார், தினேஷ், திருநா, நல்லசிவம், வீரசேகரன், கீர்த்தி, துணை முதல்வர், சுந்தரின் பேரண்ட்ஸ், உஷா பேரண்ட்ஸ் ஜான், குமுதினி பாத்திமா என எல்லாக் கேரக்டர்களும் கச்சிதமாக வார்க்கப்பட்டுள்ளது

நாம் அறிந்தேயிராத கேபிள்நெட்வொர்க் பின்னணியை அலசி ஆராய்ந்துள்ளார் கேபிளார். நிச்சயமாக நல்ல வாசிப்பவனுவத்தைக் கொடுக்கும். ஒரு ரோஸ்ட்கோலர் ரீடிங்கிற்கு உகந்த புக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *