மேல் சாதிக்காரன் & தாயாகினாள் ஒரு முதிர் கன்னி

கதைக்கும் திரைக்கதைக்குமான வித்தியாசத்தை மிக மிக எளிமையாக விளக்கியுள்ளது மேல் சாதிக்காரன் நூல். அந்த நூலில் இரு சிறுகதைகளை முழுமையாக பிரசுரித்துள்ளனர். பின் அந்த இரு சிறுகதைகளையும் குறும்படத்திற்கான திரைக்கதைகளாக மாற்றியுள்ளார் பாலமுருகன் செந்தூர்பாண்டியன். அவரது எழுத்தில் கற்றுக்கொடுக்கும் ஸ்ட்ரிக் ஆசிரியர் தொனியை விட, வாசிப்பவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தோழமைத் தொனியே உள்ளது. அதுவே நூலை ரசித்து வாசிப்பதற்கான உந்துதலை அளித்துள்ளது. எந்த நல்ல முயற்சியாக இருந்தாலும் அதை உடனிருந்து ஊக்கப்படுத்தும் கரிசல் மகேந்திரன் அவர்கள் இருநூல்களையும் அழகுற வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.

மேல் சாதிக்காரன் என்ற கதை பக்கா சாதி பொலிட்டிகல் மெட்டிரியல். அதே நூல்ல உள்ள மனக்கயிறு கதையும் முக்கியமான ஒன்னு. அருணாராஜ் எழுதிய அந்தக் கதையையும் மிக அழகான குறும்பட திரைக்கதையா மாற்றியிருக்கார் பாலமுருகன் செந்தூர்பாண்டியன்.

அடுத்த நூலான தாயாகினாள் ஒரு முதிர்கன்னி மூன்று திரைக்கதைகளை உள்ளடக்கிய நூல். அவற்றில் ஒரு கதை வசனமே இன்றி நகர்கிறது. சினிமா என்பது காட்சிமொழி. அதை எழுத்தின் வழி சாத்தியப்படுத்துவது பெரும் சவால். அந்தச் சவாலை ஜெயித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு கதை எப்படி திரைக்கதை ஆகிறது?

தெரிஞ்சிக்க விரும்புகிறவர்களுக்கும், கத்துக்க விரும்புகிறவர்களுக்கும் இந்த இரு நூல்களையும் பரிந்துரைப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *