முதல் 100 பக்கம் கடக்கும் போது “மறக்கவே நினைக்கிறேன்”. நூலுக்கு முந்தைய வெர்சனாவே தெரிஞ்சது..அதற்கப்புறம் 100 பக்கம் அல்டிமேட் ரேஞ்ச்…
சாதி மாறி கல்யாணம் கட்டி ஒரு குழந்தையோட ஊருக்குள்ள வந்த ஜோடிக்குள்ள வர்ற சண்டையில வெளிப்படுற ஒரு மேட்டர் அதிரச்செய்யும்..
” கிழவனை கொன்னுட்டு உங்கூட வந்ததுக்கு எனக்கு இது வேணும்ல” இப்படி ஒரு பொம்பள சொன்னா என்னனி இருக்கும்?
தாமிரபரணி நதி நடிக்குது. அதுக்கு எல்லாம் தெரியும். ஆனா அது கள்ளத்தனம் காட்டுது என்ற உண்மையை தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் கதைச் சொல்லும்..
ஒடுக்கப்பட்ட இனம்னு ஒரே முத்திரை குத்தி இருந்தாலும் அங்கே இருக்குற ஏற்றத் தாழ்வையும் நெத்திப்பொட்டுல வச்சி விமர்சிக்கிறார் மாரிசெல்வராஜ்..
பனையேறி, வியாபாரின்னு நாடர்ல சில பிரிவு உண்டு. கள்ளர் அகமுடையார் மறவர்னு தேவ்மார்ல சில பிரிவு உண்டு. அதை மாரி செட்யூல் காஸ்ட்ல இருக்குற பிரிவுகளை மேலோட்டமாச் சொல்லிருந்தாலும் அந்த உணர்வை உயிரோட்டமா கடத்தி இருக்கிறார்
“பெட்ரோல் கிடக்கா” என்ற வார்த்தையில் இருக்கும் நெல்லை வாடையை இயக்குநர் ராம் முன்னுரையில சொல்லிருக்கார். இது நெல்லை வார்த்தை தான். ஆனால் அதைவிட மிகச்சிறப்பான நெல்லை வார்த்தைகள் நூல் எங்கும் பொதிகை மலைக் காத்தாட்டம் இதம் கொடுக்குதுவ.
“சும்மா புத்தகம் படிகத்துல ஒன்னுமில்லல. ஒரு புக் படிச்சா அது நம்மள எதாவது பண்ணணும்” ம்பாரு எங்க சின்னயா! இந்தப் புக் நிச்சயம் நம்ம வாழ்க்கைய இரண்டு வரியாவது எழுதி வைக்கச் சொல்லும்!

