யூத்- விமர்சனம்

டைட்டிலில் விஜய் ரெபரன்ஸ், படத்தில் சிம்பு தனுஷ் ரெபரன்ஸ் என நிறைய ஹிட் மெட்டிரியல்ஸ் வைத்துள்ளார் கென். But படம் தேறுமா?

வாழ்வில் நிறைய பெண்கள் தன் காதலுக்கு நோ சொல்லிய விரக்தியில் இருக்கிறார் பத்தாம் வகுப்பு மாணவனான கென். அதன்பின் அவர் வாழ்வில் இருபெண்கள் காதல் பூச்செண்டு கொண்டு வருகிறார்கள். I love two என்பது போல இருவருக்குமே ஒகே சொல்கிறார். அதனால் வரும் விளைவுகளும், கென்னின் அம்மா அப்பா அவர் மீது வைத்துள்ள கனவுகளும் என மீதி படம் பயணிக்கிறது

கதாநாயகனாக முதல் படத்திலே சிக்ஸர் அடித்துள்ளார் கென். டான்ஸ், பைட், காமெடி, காதல் என பக்கா ஸ்கோரிங். இவை எல்லாவற்றையும் விட எமோஷ்னல் ஏரியாவில் இன்னும் சொல்லி அடித்துள்ளார். நீங்க நின்னுட்டீங்க கென் தம்பி! நாயகி அனிஷ்மா அனில்குமார் தரமான தேர்வு. அருமையாக நடித்துள்ளார். மீனாக்‌ஷி பிரியான்ஷி இருவரும் இணை நாயகிகள். இருவரும் சிறப்பு செய்துள்ளனர். அம்மா அப்பாவாக தேவதர்ஷினி, மலையாள நடிகர் சுராஜ் இருவருமே ஒரு பெரு வாழ்வை திரையில் காட்டியுள்ளனர்.கிரேட். கென் நண்பர்களாக வரும் அனைவருமே பக்கா ஸ்கெட்ச்!

ஜிவி பிரககாஷ் இசையில் பாடல்கள் அத்தனையும் ஜென்ஸிசம். அட்டகாசமான கம்போசிங். ஒளிப்பதிவாளர் விக்கி மேஜிக் செய்துள்ளார்.

சாதாரண படமாக கடக்கும் முதல்பாதி சில இடங்களில் பெரும் சோர்வைத்தந்தது. ஆனால் இன்டெர்வெலுக்கு முந்தைய பத்துநிமிடத்திலிருந்து படம் வேறலெவல் பிக்கப் ஆகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் அல்டிமேட் ரகம். நாம் என்ன செய்தாலும் நம்மை நிராகரிக்காத இரு ஜீவன்கள் அம்மாவும் அப்பாவும் தான் என படம் பேசியிருப்பது நல்லதொரு பாடம்.
யூத்- வேறலெவல் க்ரோத்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *