காதலை முன்வைத்து மேலும் ஒருபடம். படத்தில் கொலை சமாச்சாரமும் இருக்கிறது
நாயகன் ஆர்.ஜே.பி நாயகியை முதலில் ராக்கிங் செய்கிறார். அதன்பின் மோதலை கைவிட்டு காதலை தொடர்கிறார். நாயகி கேத்தியும் காதலுக்கு உடன்படுகிறார். இச்சூழலில் நாயகியின் அப்பா காதலை எதிர்க்க, இருவரும் ஓடிப்போக திட்டமிடுகின்றனர். அந்தத்திட்டம் வென்றதா என்பதே படத்தின் கதை
நிறைய்ய ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்தில் கொஞ்சமாகவே ஸ்கோர் செய்துள்ளார் ஹீரோ ஆர்.ஜே.பி. படத்தின் இயக்குநரும் அவரே. நாயகி கேத்திக்கு இன்னும் காத்திரமான ரோலை கொடுத்திருக்கலாம். இருந்தாலும் தனது பணியை அவர் சிறப்பாகச் செய்துள்ளார். செந்தில், பவுன்ராஜ், ஆனந்த் ராம், கலாவதி, சபி, ஜிவி உள்ளிட்ட பிற நடிகர்கள் அனைவரும் ஒகே ரகம்
சங்கர் ராம் இசையில் இன்னும் வலிமையான அவுட்புட் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்த வரையில் ஒகே. செல்வகுமார் தனது ஒளிப்பதிவை கூடியவரை சிறப்பாக தர முயன்றுள்ளார்
இன்னும் சற்று வீரியத்தோடு படத்தின் திரைக்கதையை இயக்குநர் அமைத்திருக்கலாம். இருந்தாலும் ஒகே. க்ளைமாக்ஸ் நேரத்தில் படம் சற்று ஆறுதலைத்தருகிறது. அதனால் அதிரிபுதிரி வெற்றி இல்லாவிட்டாலும் ஆறுதல் வெற்றி கன்பார்ம்
2.75/5

