உதிரிப்பூக்கள்- நூல் விமர்சனம்

வாழ்க்கையை அப்படியே சினிமாவாகச் சொல்லும் போது கண்டிப்பா லாஜிக் இருக்கணும். அப்ப தான் அந்தச் சினிமா ரசிகனின் உள்ளம் தொடும்…

So வாழ்வை வாழ்வைப் போலவே சினிமாவில் சொல்ல முடியாது…இந்த இடத்தில் தான் திரைக்கதை எனும் அதிசயம் தேவைப்படுது…

அந்த அதியசத்தை அற்புதமாக கையாண்டு சிலர் திரையில் வாழ்வை காட்டிவிடுவார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மகேந்திரன் சார்.. உதிரிப்பூக்கள் படம் பார்த்தவர்கள் யாவருக்கும் அப்படத்தின் பல காட்சிகள் இன்னும் பத்திரமாக இருக்கும். அந்தப்பத்திரத்தில் பட்டாவாக அமர்கிறது அப்படத்தின் இந்தத் திரைக்கதைப் புத்தகம். திரையில் வந்தவை எல்லாமே நூலில் இருக்கிறது. ஒரு திரைமொழியை கையாளும் இயக்குநர் வசனங்களை எப்படி கையாள வேண்டும் என்பதை இந்த ஒரு புத்தகத்தை வாசித்தாலே தெரிந்துகொண்டு விடலாம்

“குழந்தை மேல சத்தியம் பண்ணுங்க” என்ற கேள்விக்கு

“சத்தியத்தில நம்பிக்கை இல்ல” என்ற ஒரே பதிலில் ஒரு நிகழ்வு முடிந்து விடுகிறது

உதிரிப்பூக்கள் படம் பார்த்துவிட்டு இந்த நூலை வாசியுங்கள்..வாசித்த பின் மீண்டும் ஒருமுறை படம் பாருங்கள்…. திரைமொழியின் ஆளுமை ஓரளவு பிடிபடும்!
🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *