புருஷவேட்டை- நூல் விமர்சனம்

முதல்முறை புத்தகம் வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு நான் பாலகுமாரன், வைரமுத்து ஆகியோரை பரிந்துரைப்பேன். இப்போது இந்திரா செளந்தர்ராஜன் அய்யாவையும் அந்த வரிசையில் சேர்க்கணும். கதைகளில் அத்தனை எளிமை! கூடவே விக்ரமன் படம் போன்ற க்ளைமாக்ஸ்! இந்த நூலில் இரண்டு குறுநாவல் இருக்கிறது

ஒருகதையில், “இரண்டாம் தரமாக தன்னைக் கேட்கிறானே” என நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்துகிறாள் நாயகி. அவளை மணக்கவிருந்த மணமகனுக்கு பெருந்தன்மை என்பது செம்பரம்பாக்கம் ஏரியளவு மிகவும் பெரியது. தன்னை நிராகரித்த அந்தப் பெண்ணுக்கு வேலைக்கும் அடுத்த மாலைக்கும் உதவி செய்கிறான். அதன்பின் பல ட்விஸ்ட் நடந்து, இறுதியில், ‘இது கதையில்ல விக்ரமன் சார் படம்’ என்பதாக சுபம் போடுகிறார் இந்திரா செளந்தர்ராஜன்.

அடுத்த கதை ஒன்று சாமியாரை நம்பிய தொழிலதிபரின் நடத்தைப் பற்றியது. இதுவும் ஒரு “பாசிட்டிவ் குடும்பப்படமாக பயணிக்கிறது”

சித்தர் வழிபாட்டையும் இறைவழிபாட்டையும் ஒருசேர நம்பும் இந்திரா செளந்தர்ராஜன் அய்யா மூட நம்பிக்கைச் சம்பவங்களை ஓங்கி அடித்தது சிறப்பாக இருந்தது

முன்னமே சொன்னாற்போல் முதல்முறையாக வாசிப்பு உலகிற்கு வருவோர்க்கு புருஷவேட்டை நல்லவேட்டையாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *