ஆலம்- நூல் விமர்சனம்

ஆலம் என்றால் நஞ்சு. நெஞ்செங்கும் பழியுணர்வும், பகையுணர்வும் இருந்தால் மனிதர்கள் அரக்கர்களாக மாறுவதை தவிர்க்கவே முடியாது. இதை ஆலம் கதை ஆழமா பேசியிருக்கு. நஞ்சென்ற பெரு காலன் இரு குடும்பங்களுக்குள்ள நடத்துற கொலையாட்டத்தை இருநாளில் எழுதி முடிச்சிருக்கார் பேராசான் ஜெ.மோ

சந்தானம் என்ற ஒரு அப்பிராணி வாத்தியார். கோமதி என்ற ஒத்தைக்கு ஒரு மகன் அவருக்கு. அவன் கண்ணுக்குள்ள சின்னதா ஈரம் வந்தா கூட நெஞ்சிக்குள்ள பெருசா பாரம் கொள்ளுவாரு மனுசன். பெருஞ் சொத்தாஸ்தி கொண்ட மனுசன் , தான் ஒத்தப் பையனுக்காக எல்லாமும் செய்வாரு. அப்படி பொத்தி வளத்தப் பையனை ஆள் தெரியாம ஹெல்மெட்டோட வெட்டி தலைய துண்டா எடுத்திருதாங்க மேல் கொண்டையார் குடும்பத்தானுங்க?

அவங்க ஏன் கொன்னாங்க? அந்தப் பையன் தன்னோட காதலியைப் பாக்க செவல் கொண்டையார் குடும்பத்துப் பையன் பைக்கில போயிருக்கான்! ஹெல்மெட் போட்டுட்டுப் போனதால ஆளு தெரியாம சீவிட்டானுவ.

மேல் கொண்டையார் குடும்பத்துக்கும் செவல் கொண்டையார் குடும்பத்துக்கும் பெரும்பகை..அதுக்கு காரணம் வீரலெட்சுமி! யாரு வீரலெட்சுமி? ஒரு சாதாரண குடும்பத்துப் பொம்பள. ஆனா வீரநாச்சி வம்சம்..அதனால அவளப் பொண்ணு கேட்டு, மேல்கொண்டையார் குடும்பத்துல ஒரு மாப்பிள்ளயும், செவல் கொண்டையார் குடும்பத்துல் ஒரு மாப்பிள்ளயும் ஒரே நேரத்துல பொண்ணு கேட்டு வாராங்க..வீரலெட்சுமி அண்ணன் தம்பிவளுக்கு என்ன செய்யன்னு குழப்பம்? ரெண்டும் பெரிய குடும்பம்.. கொடைச்சல் குடும்பம். யாருக்கு கொடுக்க..யாருக்கு மறுக்கன்னு மறுவுதாங்க. அப்ப ஒரு அய்யரு, “ரெண்டுவேர்ல பொண்ணுக்கு எவனைப் பிடிச்சிருக்கோ அவனை வந்து பொண்ணத் தூக்கிட்டுப் போச்சொல்லிடே. பலிய தூக்கிட்டுப் போனவன் மேல போட்டுட்டு நீங்க சும்மாருங்க” என அய்யர் ஐடியா கொடுக்காரு. வீரலெட்சுமிக்கு செவல் கொண்டையார் மாப்ள தான் பிடிச்சிருக்குன்னுட்டா.. காரணம் அவன் கையில வாச்சு கட்டிருக்கான். அந்தக் காலத்துல கையில வாச்சி கெட்டுனா ஒரு எக்ஸ்ட்ரா பவுசு . வீரலெட்சுமி குடும்பம் செவல் கொண்டையார் டீமிற்கு தகவல் சொல்ல, அவங்க பொண்ண வந்து தூக்குதாங்க. இடையிலே போய் காரை மறிச்சி மேல் கொண்டையான் குடும்பம் பொண்ண இழுத்துட்டுப் போய் தாலியக் கட்டுது வீரலெட்சுமிக்கு. அதுல நடக்க வெட்டு குத்து பெரும் பகையாகி மாறிமாறி வெட்டிச் சாவுதான்வ. சாவு வளந்து வளந்து வாழுத உசுரு எல்லாம் போவுதுவ. அப்படி இரண்டு குடும்பத்துக்குமான பகையில தான் ஆளு தெரியாம அப்பாவியான சந்தானம் மவன் கோமதியை வெட்டிருதானுவ மேல் கொண்டையானுங்க. அதுல உடைஞ்சி போன சந்தானம் புத்திய கையில எடுத்து, கூலிப்படைவள வச்சி மேல் கொண்டையார் குடும்பத்த மொத்தமா கருவறுத்துட்டே வாரார். பையன் செத்த அன்னைக்கி பொண்டாட்டியும் செத்தா. அந்த ஆத்தாமயும் கோவமும் சேந்து தான் மேல் கொண்டையார் குடும்பத்துல 40 பேரை கொல்ல வைக்கிது. 85 கோடிக்கு சொத்துவள வித்து யாராலும் கண்டு பிடிக்க முடியாம கெட்ச் போட்டு கொல்லுதாரு. வீரலெட்சுமியோட மூனு மவன்வளும் செத்தாச்சி. இப்ப வீரலெட்சுமிக்கு ஒரே மகன் தான் இருக்கான்..அவனைக் காப்பாத்த கிழவியான வீரலெட்சுமி படாதபாடு படுதா. அவளுக்கு சப்போர்ட்டா ஒரு ஜுனியர் வக்கிலு இருக்காப்டி. அவர் சொல்லுவ மூலம் தான் இந்த நாவலே நகருது

ஜெயமோகன் நாவல்கள்லே இவ்வளவு வேகமான நடை கொண்ட நாவல் வந்ததே இல்ல. ஜுனியர் வக்கிலு, கோப்ரா வக்கிலு, கிருஷ்ணசாமி வக்கிலு, வீரலெட்சுமி, சந்தானம், சண்முகம், தமயந்தி, கதிரு, மாணிக்க வேலு இன்னும் இருபது கேரக்டராவது இருக்கும். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு முடிவு தெளிவா வந்துருக்கு எழுத்துல. வெற்றிமாறன் கேட்டு எழுதப்பட்ட கதையாம் இது

ஒரு நொடில ஏற்படுத வெறி எத்தனை சாவை உருவாக்குது. விட்டுக்கொடுக்கதும், விட்டுட்டுப் போவதுமான மனசு உலகத்துல எத்தனை பேருக்குத் தான் இருக்கு?

ஒரு தரமான வெப்சீரிஸ் பண்ணா வேறலெவல்ல இருக்கும்👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *