தங்கக்காடு- நூல் விமர்சனம்

இதுவொரு ஆன்மிக மிஸ்டரி🔥🔥

“பக்தில லாஜிக்கே கிடையாது. ஒன்லி மேஜிக் தான்” என்ற கேட்டகிரி தான் இந்திரா செளந்தர்ராஜனின் பலம்😍

அமெரிக்காவுல இருந்து வர்ற ரிஷபன் பெரும் கோடீஸ்வரன். அவனின் அப்பா நெல்லையில் தொழு நோயால் பாதிப்புண்டு கிடக்கிறார். அவரை உயர் மருத்துவம் காப்பாற்றும் என்கிறான் மகன். அவரோ ஒரு நாடி ஜோதிடரின் சொற்கள் தரும் சித்த மருந்தே தன்னைக் காக்கும் என்கிறார். ஜோதிடத்தை அவன் நம்பவில்லை. அறிவியலை தந்தை ஏற்கவில்லை. அப்பா சொன்ன நாடி ஜோதிடரை ரிஷபன் சந்திக்கிறான். அவர் சொல்லும் மேஜிக் வார்த்தைகள் அவனுக்குத் திருப்தியைத் தரவில்லை. அவர் சொன்னதை ஏற்காமல் அவன் போகிறான். ஆனால் அவர் சொன்ன ஒவ்வொன்றும் நடக்கிறது. அதன்பின் “தானே மேல்” என்பவர்களை எல்லாம் “தனக்கு மேல் ஒன்றுள்ளது” என்று இயற்கை சொல்ல வைக்கும் என்று நம்புகிறான். தங்கக்காடு என்ற கதை இப்படித் தான் நிறைவெய்துகிறது. இதே புத்தகத்தில் நானே வருவேன் என்ற இன்னொரு கதையும் உண்டு. அது எளிய மக்கள் சிறு தெய்வங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைச் சார்ந்த கதை

“எல்லாமே சாமி” என்பவர்க்கு இந்திரா செளந்தர்ராஜன் பொக்கிசம். “எதுவுமே சாமியால் அல்ல” என்பவர்க்கு இவர் சாதாரணம். பக்தி மற்றும் பகுத்தாய்தல் என்று ஊடாடும் நபர்களுக்கு இசெ விசித்திரம். எப்படியும் இந்திரா செளந்தர்ராஜன் ஒரு தனித்துவப் பாதையைப் போட்டுவிட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். ரொம்ப ஆரம்ப நிலை வாசகர்களுக்கு அடியேன் பாலகுமாரனை பரிந்துரைப்பேன். இனி அந்த வரிசையில் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களையும் சேர்ப்பேன்

கடவுள் நம்பிக்கை ஜோதிட நம்பிக்கை என அவர் எதைச் சொன்னாலும் அதில் நல்லன இருக்கிறது. அதை நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *