“சில நேரங்களில் குறைந்தபட்ச வழிகாட்டுதலுடன் ஒரு நடிகர் நான் விரும்புவதைச் சரியாக எனக்கு வழங்குகிறார். சில நேரங்களில் நான் நடிகரை கிட்டத்தட்ட ஒரு கைப்பாவையாகப் பயன்படுத்தி, ஒரு துல்லியமான முறையை திணிக்க முயற்சிக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுடன் நான் தவிர்க்க முடியாத வகையில் கையாளும் முறை இதுதான். திரையில் ஏற்படும் இறுதி விளைவுதான் முக்கியம் என்பதால், விரும்பிய விளைவை அடைய உதவும் எந்த முறையும் செயல்படுத்த உகந்ததாகும்” நடிகர்களை வேலை வாங்குவதைக் குறித்த ரேயின் இந்த கூற்று மிக முக்கியமானது. “வந்தது போதும் என விடாமல், தான் எதிர்பார்த்தது வரும்வரை விடாமல் போராடி நடிகனிடமிருந்து இயக்குநர் அதைப்பெறும் போது திரையில் அற்புதம் நிகழும். அப்படியான அற்புதத்தை நிகழ்த்த தாளாத கலைத்தாகம் வேண்டும். இந்த நூல் கலையை ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பால் வசப்படுத்த இயலும் என உணர்த்துகிறது. சத்யஜித் ரே நேர்காணலும், போலந்து இயக்குநரை அவர் எடுத்த நேர்காணலும் சிறப்பானவை. மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் சத்யஜிய் ரே குறித்து பேசியிருக்கும் கட்டுரை தரமான ஒன்று. அடூர் கோபாலகிருஷ்ணன் தனது படங்களின் திரையிட்டு நிகழ்வுக்கு சத்யஜித் ரேயை கேரளாவிற்கு அழைப்பது தொடர் வழக்கமாக இருந்துள்ளது. ஒருமுறை ரே ” தனக்கு நடந்துள்ள அறுவை சிகிச்சையைச் சொல்லி இந்தமுறை வர முடியாது என வருந்திச்சொல்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் சூழலை புரிந்து வருந்தினாலும், பட திரையிடலின் போது நம்பிக்கையோடு ப்ரிவியூ தியேட்டர் வாசலில் நிற்கிறார். அந்த நம்பிக்கை வீண்போகாத படி சத்யஜித் ரே அங்கு வருகிறார். ஒரு கலைஞனுக்கு தனது கலைமீதான பெருங்காதல் அளவிட முடியாதது. புறவய / அகவய அழுத்தத்திற்கு அப்பார்ப்பட்டது. இந்த நிகழ்வு அதை நெகிழ்ச்சியோடு உணர்த்தியது
சத்யஜித் ரேயின் வாழ்க்கைக்குறிப்பும் இதிலுள்ளது. அது இணையத்திலே கூட கிடைக்கும். ஆனால் அவரின் இசை பற்றிய புரிதல், கேமரா கோணங்கள் பற்றிய ஆற்றல், எடிட்டிங் குறித்த அவதானிப்பு எல்லாம் நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. திரைப்பட மாணவர்களுக்கு மிகவும் உகந்த நூல்
நூலை பரிசளித்த அண்ணர் Kabilan Krs கபிலனாருக்கு நன்றிகள்

