பொண்டாட்டி- நூல் விமர்சனம்

😎

நாவலைப் பத்தி எழுதுமுன்ன நாவல் வாசிக்கும் போது நடந்த சம்பவத்தைப் பத்தி எழுதணும்

ஒரு புரொடக்சன் ஆபிஸ் போயிருந்தேன். டைரக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய சூழல். கால் மணி நேரத்துக்கு மேல் டைம் கிடைத்தால் உடனே புத்தகத்தை தூக்கிவிடுவது பழக்கம். அதனால எங்க போனாலும் புத்தகங்களை கையோடு எடுத்துட்டுப் போவேன். அப்படித்தான் அன்னைக்கு அந்த ஆபிஸ்ல வச்சி அண்ணர் அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலை கையில் வைத்துப் புரட்டினேன். நான் லயித்து லயித்து( ஏன் லயிக்கணும்? காரணம் நாவல்ல இருக்கு) வாசிக்கிறதைப் பார்த்துட்டு ஒரு பெரியவர் பக்கத்தில் வந்து, போக்கிரி படத்தில் வடிவேலு டீக்கடை காட்சி ஒன்றில் பேப்பரை ஒருவன் மடியில் உட்கார்ந்து படிப்பாரே அதேபோல் என்னருகே வந்து நூலின் அட்டைய ‘தூக்கி’ பார்த்தார். பின் என்னைப் பார்த்து, “யாரு அராத்தா…இந்தப் பையனைப் போயா படிக்கிற?” என்றார்

ஏன்னு கேட்டேன். ‘கண்டதையும் எழுதுவானேப்பா’ ன்னார். ‘இந்தப் புக் படிச்சிருக்கீங்களா?’ ன்னு கேட்டேன். ‘ இவர் எழுத்தலாம் விமர்சனம் பண்றதுக்கு எதுக்குப் படிக்கணும்’னார்.

அண்ணர் அராத்து சில ஆட்களிடம் இப்டியெல்லாம் ‘பேர்ச்சொத்து’ சேர்த்து வைத்திருக்கிறார். சரி பொண்டாட்டிக்கு வருவோம்.

துளிகூட அலுப்பு தட்டாத நாவல். அப்பப்ப தொடை சிலுக்குற மாதிரியும், தொண்டை சிரிக்கிற மாதிரியும் சம்பவங்கள் நாவலுக்குள்ள உண்டு. எனக்கு நாவல்ல ரொம்ப பிடிச்ச பொண்கள்னு சொல்லணும்னா. கண்டிப்பா எல்லாப் பெண்களையும் சொல்லணும். அன்னம், சுமதி, சந்திரா, பொற்செல்வி, ஆதிரை, தீப்திகா, கன்யா, ப்ரியாந்தனி இவங்க போக இன்னும் சிலர் இருக்காங்க. அந்தரங்கம் என்பதை பொது அரங்கத்துல போட்டு உடைக்கிற பெண்களில் தீப்திகா நம்பர் ஒன். அவ தான் ஹீரோயின். எவ்வளவு முற்போக்குப் பேசினாலும் சின்ன ரொமான்ஸுக்கு விழுந்து விடும் பல பெண்களை சுட்டிச் செல்கிறார் ரைட்டர். வெறும் லஸ்ட்க்கு மட்டுமே ஆதிரைய அவிழ்க்கச் சொல்லும் லக்ஸ் என்ற பையனை நிச்சயமாக வீட்டுக்கு வீடு பார்க்க முடியும். ‘வாழ்வதற்கு பொற்செல்வி, பாய்வதற்கு தீப்திகா’ என்ற கொள்கை கொண்டவர்களே ஆண்கள் பொதுமைப் படுத்துகிறார் அராத்து

ஆத்தாவிடம் அருள் வாங்கி கதையை எழுதி ஆத்தாவிடம் கதையை ஒப்படைத்து விமர்சனம் கேட்கும் போது, ஆத்தா ‘போடா ங்கோ. ஆ’ என்ற ரேஞ்சிற்கு ரிப்ளே கொடுப்பது நல்ல பினிஷிங்

பெண்கள்/ ஆண்களின் உடற்பாடுகள் உளவியல் பாடுகள் தான் நாவலின் சாராம்சம். பல பர்னிச்சர்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயமோகன் என்ற பெயர்ல ஒரு கேரக்டர் வருது. ‘வக்காலி’ மேட்டர்லாம் ஒரு மேட்ரே இல்லன்னு நினைக்கிற ஆண் வர்க்கத்துக்கு மத்தியில ஜெயமோகன் தனி ரகம். அந்தக் கேரக்டரோட மேனரிசத்தை ஒரு முறை அராத்து ரைட்டிங்கில் வாசிக்கணும். அடுத்து சாரு நிவேதிதா அப்டின்னு ஒரு கேரக்டர் நாவல்ல வருது. அவரோட உள்ளங்கால் முத்தத்திற்கு சிலர் சில்லறையைச் சிதற விடக்கூடும். எழுத்தாளர்களை இந்தச் சமூகம் சரிவர மதிக்கிறதில்லை என்ற குறைகள் இந்த நாவலில் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அப்புறம் நாவலுக்குள் செல்லுமுன் எல்லா ஆண்களுக்கும் ஒரு ஆணுரை (He mean ஆண்களுக்கான உரை) வழங்கியுள்ளார் அராத்து.. Interesting…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *