கண்டிப்பான பாஸும், கனிவான அசிஸ்டெண்டும் ஒன்றிணையும் காமெடி கலாட்டா இந்தச் சண்டக்காரி
ஓப்பன் பண்ணா கதை லண்டன்ல நடக்குது. விமல் வேலை தேடிச்செல்லும் நிறுவனத்தில் ஸ்ரேயா தான் மேலதிகாரி. அவருக்கு அசிஸ்டெண்டாக சேர்கிறார் விமல். பெரும் கோபக்காரியான ஸ்ரேயாவிற்கும் விமலுக்கும் செட்டாகவில்லை. அப்போது ஸ்ரேயாவிற்கு லண்டனில் தங்குவதில் ஒரு பஞ்சாயத்து வருகிறது. அதனால் அவர் விமலை Fake-ஆக கல்யாணம் பண்ணி லண்டனில் தன் இருப்பைத் தக்க வைக்க நினைக்கிறார். விமலுக்கும் லண்டனில் காரியம் ஆகவேண்டியுள்ளதால் சம்மதிக்கிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை
சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியும் ஸ்ரேயாவிற்கு இன்னும் தமிழ் வசனங்களை லிப் சிங்கோடு பேசமுடியவில்லை. ஆனால் அதற்காக வருத்தப்படுவதா..இல்லை இத்தனை வயதிலும் இவ்ளோ அழகாக இருக்கிறாரே என்று சந்தோசப்படுவதா என்று தெரியவில்லை. விமல் ஈசியாக ஹேண்டில் பண்ணும் கேரக்டர் என்பதால் ஒகே மார்க் வாங்குகிறார். பின்பாதியில் பிரபு கே.ஆர் விஜயா உள்ளிட்டோர் ஓரளவு ஸ்கோர் செய்கிறார்கள். லண்டனில் சத்யன் கிச்சுகிச்சு மூட்டுகிறார்
படத்தில் கேமராமேன் குருதேவ் கிராமத்து அழகையும், லண்டனின் அழகையும் சிறப்பாகக் காட்டியுள்ளார். இசையமைப்பாளர் அம்ரிஷ் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் மெட்டிரியலாக இருந்த ட்யூன்களை போட்டுள்ளார். பின்னணி இசை பரவாயில்லை
கமர்சியல் படங்களை சரியாக கையாளும் இயக்குநர் மாதேஷ் இன்ட்ரஸ்டிங்கான ஒன்லைனை தான் கையிலெடுத்துள்ளார். ஆனால் திரைக்கதையில் எந்த மோட்டிவுமே இல்லை. அதனால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. சிற்சில காமெடி காட்சிகள் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகின்றன
2.75/5
-வெண்பா தமிழ்

