நேற்று மிகப்பிரம்மாண்டமாக சென்னை கமலா திரையரங்கில் கஸ்தூரி வீடு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் உள்பட படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் நாயகன் சமுத்திரக்கனி பேசுகையில்
“இயக்குநர் நன்றி கூறிய அத்தனை பேருக்கும் நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ,ஒரு நல்ல பயணம் இது.விஜய் ஆனந்தை சந்தித்து பேசும் போது சொன்ன விஷயங்கள் அவரோடு பயணப்பட்டது தயாரிப்பாளர் மேடம் அவர்களோடு பயணப்பட்டது எல்லாமே அற்புதமான விஷயம்.ஒவ்வொரு முறையும்ஒவ்வொரு புதுப் புது மனிதர்களோடு பயணம்செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்றுநினைக்கிறவன் நான்.
புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன்.இந்த மாதிரிப் படங்களுக்குத்தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும்.அப்படி ஒரு ஆசை இருக்கும்.நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.நான் யாரைத் தேடுகிறேனோ அவர் ஒரு படம்எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார்.
இப்படி மாறி மாறித் தேடிக்கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.
இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன்.அதுதான் நிஜம் .நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும்.அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம்செய்வோம்; 100 சதவீதம் செய்வோம் .உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
என் குருநாதர் சொல்வார் “நீ உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்”னு சொல்லுவாரு .அதற்கு ஒரு உதாரணம்தான் ‘மண்டாடி’ சூரியோட திரைப்படம்.அவருடைய உழைப்புதான்,அந்த இயக்குநரும்அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடைய உழைப்பும் , அந்த அசுர உழைப்புதான் அந்தப் படத்துக்கான ஒரு பெரிய முகமா வந்து நிற்கும். அப்படி நம்முடைய உழைப்பை 100% நாம் போட்டால் போதும்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்! தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !இதில் பணிபுரிந்ததொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகையர்அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,வெல்வோம்!என்றார்.

