ப்ளாக்- விமர்சனம்

தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கண்டம் தாண்டி பயணிக்கும் பேரன்

கர்நாடகத்தில் இந்தியாவின் தேசியக்கொடிகளை தயாரிக்கும் வேலை செய்யும் மிக்கி மக்கி ஜாவிற்கு டெல்லி கோட்டைக்குச் சென்று தேசியக்கொடி ஏற்றுவதைப் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அவரின் ஆசையை தனது கனவாக கொண்டு அவரது பேரன் திஹான் தன்னந்தனியாக பயணிக்கிறான். அவனது பயணம் வழிதெரியாமல் இலக்கின்றி அமைகிறது. அந்தப்பயணத்தின் நடுவே பேசப்படும் தேசிய அரசியல், எமோஷ்னல் சம்பவங்கள் தான் படத்தின் கதை

சிறுவன் திஹான் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். மிக்கி மக்கி ஜா தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரின் ஆழம் உணர்ந்து கதையில் வாழ்ந்துள்ளார். கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பலர் ஓரளவு நன்றாக நடித்துள்ளனர்

ராஜா ரவி வர்மா, தரமான இசையை வழங்கியுள்ளார். படத்தின் இயக்குநர் பொன்சங்கரே ஒளிப்பதிவாளர் என்பதால் சின்ன பட்ஜெட்டிலும் தரமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். மேலும் குட்டிச் செலவில் நாமும் இந்தியாவைச் சுற்றிப்பார்த்து உணர்வை தனது கேமராவால் தந்துவிடுகிறார் பொன்சங்கர்

மிகவும் இன்ட்ரெஸ்டிங்கான ஒன்லைனை பிடித்த இயக்குநர் திரைக்கதையிலும் போதுமான சுவாரஸ்யங்களைச் செய்துள்ளார். படத்தில் சின்னச் சின்ன சமரசங்கள் இருந்தாலும் ஒரு தேசப்பற்று படமாக படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்துள்ளது!
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *