குற்றமும் விசாரணையும் என்ற வகைமையில் எண்ணற்ற நாவல்களை எழுதியவர் ராஜேஷ்குமார். அவரின் நாவலிலிருந்து ஒரு கதையை உருவாக்கி வெப்சீரிஸ் ஆக்கியிருக்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் தினகரன்
தென்காசி மாவட்டத்திலுள்ள சில இளைஞர்களுக்கு ஒரு கும்பல் வெளிநாட்டு மருந்துகளை செலுத்தி டெஸ்ட் செய்கிறது. அதில் ஒரு இளைஞன் ஆபத்தில் விழுகிறான். உடனே இந்த மருத்துவ ஸ்கேமை வெளியில் கொண்டுவர முயற்சிக்கிறான். இளைஞனின் உயிரை மெடிக்கல் மாஃபியா பறிக்கிறது..அதனைத் தொடர்ந்து சில மரணங்கள் நிகழ, காவல் அதிகாரியான பாலஹாசன் விசாரணையில் இறங்குகிறார். அதன் முடிவு என்ன என்பதே இந்த இணையத்தொடரின் மீதிக்கதை
பாலஹாசன் போலீஸ் கேரக்டருக்கு சாலப்பொருத்தம். நின்று நிதானமாக நடித்துள்ளார். அவரின் செட்டிலான நடிப்பு பெரிய பலம். வினோதினி வைத்யநாதன் சொல்லிக்கொள்ளும் படி ஒரு கேரக்டரில் வருகிறார். பவித்ரா ஜனனி, கிச்சா உள்பட ஏனைய கேரக்டர்களும் அசத்தியுள்ளனர்
சிக்கனமான ஷாட்ஸ்களை கூட பிரம்மாண்டமாக்க முயற்சித்துள்ளார் கேமராமேன். பின்னணி இசையில் பெரிய அழுத்தமில்லை என்றாலும் பெரியளவில் குறையுமில்லை..ஷார்ப்பான எடிட்டிங் இந்த சீரிஸுக்கு நல்ல அம்சத்தை சேர்த்துள்ளது
ராஜேஷ்குமார் கதைகள் என்றாலே திருப்பங்கள் நிறைந்தது. அதை இந்த சீரிஸின் திரைக்கதையிலும் காண முடிகிறது. யூகிக்க முடியாத பல காட்சிகள் அட போட வைக்கின்றன. பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் கதை என்றாலும், எமோஷ்னல்ஸ் இன்னும் முழுமையாக கூடிவரவில்லை. எழுத்திலும் மேக்கிங்கிலும் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம்..மேலும் தென்காசியின் நிலப்பரப்பும் மொழியும் முழுமையாக திரையில் கன்வெர்ட் ஆகவில்லை.
அடுத்தடுத்து வரக்கூடிய ட்விஸ்ட், அடுக்கடுக்காக வரும் தகவல்கள் ஆகிவற்றுக்காக ஒருமுறை ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யலாம்
3/5
-வெண்பா தமிழ்

