கருக்கு- நூல் விமர்சனம்

“டீக்கு டீ குடிச்சிறலாம்டே..வாழ்வுக்கு வாழ்வு வாழ மிடியாது”ம்பாரு செத்துப்போன வேம்புகாளி மாமா.

கருக்கு நாவல்ல பாமா ஒரு வாழ்க்கைய வாழ நினைச்சிருக்காவ. வாழ்க்க வேற ஒன்ன விதிச்சி வச்சிருக்கு. ஊரு தீண்டாத பறக்குடில பெறந்து, ஒரு வா கஞ்சிக்கு அம்பாயப்பட்டு, ஒதுக்குத மனுசங்க முன்னாடி குறுகி நின்னு, உடும்பு மாதி படிப்ப வளத்துக்கிட்ட பெறவும், பாமா பட்டபாடுவள மேக்குத் தொடச்சி மல உசரதுக்கு எழுதிற முடியும். அம்புட்டு சங்கதிவளையும் 123 பக்கங்களுல நம்ம நெஞ்சிக்கிப் பக்கமா வைக்க மாதி எழுதிருக்காவ

சாலியக்குடிக்கும் பறக்குடிக்கும் நடக்க கல்லறைச் சண்டையில் ஒடுக்கப்பட்ட மக்க போலீஸால படுற பாடுவள உசுரும் மூச்சுமா எழுத்துல வார்த்திருக்காவ

கத்தோலிக்க கன்னியாஸ்திரி மடங்கள்ல நடக்க பாகுபாடுகள எந்த ஜோடனையும் இல்லாம நாவல்ல கொண்டு வந்திருக்காவ. ஒரு மனுசன்னா அவன் ஒரு மனுசன் மட்டுமில்ல. ஒரு சமூகமும் கூடத்தான். அந்த வகையில இது ஒரு தனிமனிஷி வாழ்க்கையோட இணைஞ்ச ஒரு சமூக நாவல்

” சாமி எல்லாத்தையும் சமம்னு சொல்லும். ஆனா சாமிய வச்சி பொழைக்கிற சனம் பூராம் சாமி சொல்லுததை மைத்துக்கும் மதிக்காதுக. ஒரு சாதிக்குள்ளே துட்டுருக்கவன் இல்லாதவன்ற ஒரு பிரிவு. துட்டுக்குன்னு இருக்க மதிப்பு வேற ஒன்னுத்துக்கும் கிடையாது. அது 1992-ல இந்த நாவல் வந்த காலத்துலயும் சரி, இப்பமும் சரி.

பாமாவோட சேந்து, படிச்சி, வேலைக்குப் போயி, சேவைக்குப் போயி, தோத்துப் போயி, திரும்பவும் ஜெயிக்க எந்திச்சி நிக்க வைக்குது இந்த கருக்கு

தரமான ஒன்னு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *