இலக்கியங்களில் சிறுவர் இலக்கியம் என்ற வகைமை இருப்பதைப் போல அனிமேஷன் படங்களிலும் குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள் நிறைய உண்டு. தமிழில் அம்முயற்சிகள் தொலைக்காட்சியில் கை கொடுத்துள்ளன. திரையிலும் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இப்படத்தின் இணை தயாரிப்பில்
ஸ்ரீராம் சந்திரசேகரன் தொடங்கிய Broadvision Perspectives எனும் நிறுவனம், பங்கேற்றுள்ளது.
நமக்குப் பரிச்சயமான இதிகாச கதைகள் இல்லாமல் மேலை நாட்டுக்கு கனெக்ட் ஆகும் வகையில் கிறிஸ்துமஸ்தை வைத்து இக்கதையை உருவாக்கியுள்ளனர்
யோயோ சாண்டா கிளாஸ் நடத்தும் ஒரு வொர்க்ஷாப்பிற்கு செல்கிறான். பெரிய மேஜிக் அங்கு நிகழும் என அவன் எதிர்பார்க்கிறான். But nothing என்றதும் அவன் அப்செட். சேம்டைம் அங்குள்ள ட்ரோன்கள் ஹேக் செய்யப்படுகின்றன. அவற்றை யோயோ எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதாக மிஸன் சாண்டாவின் கதை பயணிக்கிறது
முன்னமே சொன்னது போல நமக்கு பரிச்சயமற்ற கதை என்பதால் நமக்குள் கதை கனெக்ட் ஆகவில்லை. திரைக்கதையில் சின்னச் சின்ன ஆச்சர்யங்களும் சுவாரஸங்களும் இருப்பதை மறுக்க இயலாது. எமோஷ்னல் கனெக்டிங்-ஐ மட்டும் இன்னும் ஸ்ட்ராங் செய்திருந்தால் இந்த அனிமேஷன் தூள் கிளப்பியிருக்கும். எளிமையான ஆங்கிலம் தான் என்றாலும் சப்டைட்டிலும் போட்டிருந்திக்கலாம். அடுத்தமுறை தமிழில் முயற்சித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
நம்மூர் எலைட் சிறுவர்கள் நிச்சயமாக ஒரு விசிட் அடிக்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

