காதல் அறிவியல்- நூல் விமர்சனம்!

காதல் அறிவியல்? என்ற தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் காமெடியாத் தான் தோணிச்சிது. ஆனாலும் “தாம்பத்ய தந்த்ரா” புக் எழுதியவராச்சேன்னு எடுத்தேன் அஞ்சு நாள்ல முடிச்சேன்

போலிக்காதல்கள் முடியுற இடம் காமம் தான்னு சொல்வாங்க..ஆனா நம்மைப் பொறுத்தவரை காதல் துவங்குற இடமே காமம் தான். ஆசை காதலாகி, அதற்காக மோதலாகி, இதயம் இடம்பெயர்ந்து, அன்பு உயிர் கலந்து கடைசியில் காமத்தில் அனைத்தும் செட்டில்ட் ஆகும். அதில் பல வெல் செட்டில் ஆகும். சில புஸ்வானம் ஆகும்.

ரைட்!
இந்த நூல் பதின்பருவத்தில் (15+ வயசுல) காதல் மலர்வதற்கான காரணத்தை அறிவியலோடும் மரபியலோடும் விளக்கிய விதம் பிடிச்சிருந்தது. அதில் நிறைய உளவியல் உண்மை இருந்தது அல்டி. 👌

முன்னலாம் பெத்தவங்க ஒரு தராசை கையில் வச்சி நல்லது கெட்டதை எடை போட்டுப் பிள்ளைங்க கையில கொடுப்பாக..இப்ப அப்படியா? பிள்ளிய கையிலே தராசை கொடுத்துட்டு நீயே சரியானதை எடைப் போட்டு எடுத்துக்கனு சொல்லிடுறாங்க. இனி அதுவ தான் கவனமா இருந்துக்கணும். அதுக்காக வெம்போன்னு விட்றவும் முடியாதில்லியா? கூடுமான வரைக்கும் கூடுதல் கெடுதல் இல்லாம இளம் பருவத்தை கடக்க கத்துக் கொடுக்குறது நம்ம கடமை. அதை எப்படி கத்துக் கொடுக்கணும்னு கத்துத் தருது இந்த நூல்.

காதல்களை பெத்தவங்க எதிர்க்கிறதுக்குப் பின்னாடி சாதி பெருங்காரணமா இருந்தாலும் அதுக்கு முன்னாடி பொருளாதாரமும் முக்கியக் காரணமா இருக்குன்னு சொல்றார் தந்த்ரா யோகி போதி பிரவேஷ். இதை முழுசா ஏத்துக்க முடியாட்டியும்..முற்றா மறுத்துடவும் முடியாது

சைக்காலஜிக்கள் புக்ஸ் மேல இப்ப ரொம்பவே காதல் வருது…ஸாரி காமம் வருது..so pls அந்த மாதிரி புக்ஸ் ரெபர் பண்ணுங்க🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *