அண்ணா ஹசாரே- நூல் விமர்சனம்

“ஊழலுக்கு எதிராக பெரிய குரல்..அது அறத்தின் குரல் காந்தியத்தின் குரல்” என்கிறார் ஜெயமோகன். 2012 கால கட்டத்தில் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற போராட்டத்தை அண்ணா ஹசாரே முன்னெடுத்தார். அவரின் முன்னெடுப்பிற்கு பின்னால் RSS பி.ஜே.பி இருக்கிறது என்ற வாதம் இடதுசாரிகளால் வைக்கப்பட்டது. ஆனால் ஜெயமோகன் அதை முற்றாக எதிர்த்துள்ளார். ‘பி.ஜே.பிக்கும் ஆபத்தை விளைவிக்கும் இந்தச் சட்டம்’ என்கிறார் ஆசான். ஆனால் 2ஜி வழக்கை முன் வைத்தே அண்ணா ஹசாரே இதைச் செய்தார் என்பது தெற்கின் வாதம். மேலும் ஊழல் என்பது அடிமட்டத்திலிருந்து நேர் செய்ய வேண்டியது. எடுத்த உடனே மொத்தமாக அழிக்க முடியாது என்பதையும் சிலர் கேள்விகள் கேட்க, வெடித்தெழுந்து பதில் சொல்கிறார் ஆசான். “ஊழலை ஒன்றும் செய்ய முடியாது” என்பதை மனதிற்குள் ஏற்றுகிறார்கள். அதற்கு நாம் அடிமையாகி விடக்கூடாது என்பது ஆசான் வாதம்

ஊழலுக்கு எதிரான ஆயுதத்தை மக்கள் ஒன்றிணைந்து எடுத்து ஊழலை அகற்ற முன்வரவேண்டும் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால் யாராவது ஒருத்தர் ஊழலை மட்டும் தான் எதிர்ப்போம் என்பது ஒருமை சார்ந்த போக்கு இல்லியா? அண்ணா ஹசாரே மேல் பலருக்கும் டவுட் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம்! மேலும் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அண்ணா ஹசாரேவின் இருப்பு கரைந்து போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஆசான் இந்த நூலை அண்ணா ஹசாரேவிற்கு ஒரு கேடயமாக எழுதியுள்ளார். வெறும் ₹20 ரூபாய்க்கு இந்த நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டு பரப்பட்டதற்குப் பின்னால் வலதுசாரி அரசியல் இருப்பது பலரின் கருத்து..

Finally..இந்த புத்தகம் குறித்து நிறைய பேரிடம் ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்த முடிந்தது. அந்த வகையில் எனக்கு இந்த நூல் நல்ல அனுபவத்தை தந்துள்ளது🙌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *