யோலோ- விமர்சனம்

காதல் படமாக துவங்கி பேய் படமாக பயணித்து எமோஷ்னல் படமாக முடிகிறது யோலோ

ஹீரோ தேவ் ஹீரோயின் தேவிகா, இருவருக்கும் தெரியாமலே இவர்களுக்கு திருமணம் நடந்ததாக கதையில் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் இவர்கள் ரூபத்தில் வாழ்கிற அந்த இருவர் யார்? என்ற கேள்வி நோக்கி படம் பயணிக்கிறது

ஹீரோ தேவ் யூட்யூபில் ப்ராங் வீடியோ எடுத்துச் சம்பாதிப்பவராக வருகிறார். கூடுமானவரை இயல்பாக நடித்துள்ளார். ஹீரோயின் தேவிகா எமோஜி வெப்சீரிஸிலே நல்ல கவனம் ஈர்த்த நடிகை. இப்படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நாயகியும் குறையேதுமில்லை. வில்லன்களாக வருபவர்களின் செயல்களில் ஏற்கெனவே பார்த்துச் சலித்துப்போன பெர்பாமன்ஸின் சாயல்

படத்தின் ஹீரோவாக தனித்துத் தெரிகிறார் ஒளிப்பதிவாளர். Every ப்ரேமிங் அசத்தல் ரகம். DI வொர்க்கும் பக்காவாக வந்துள்ளது. விஷுவலாக படம் மாஸ்டர் பீஸ். இசை அமைப்பாளர் சரியான அளவில் பின்னணி இசையை வழங்கியுள்ளார். பாடல்களும் ஒகே

பிரதான கேரக்டர்களின் பிரச்சனை வலுவாக இருந்தாலும், அதை எக்ஸ்கியூட் செய்த விதத்தில் இயக்குநர் சற்று தடுமாறியிருக்கிறார். ஹீரோ ஹீரோயினுக்கான கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகியிருப்பது மட்டுமே படத்தில் ப்ளஸ் ஆக இருக்கிறது. Interesting-ஆன கதை கிடைத்தும் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *