முண்டாசுப்பட்டி ஸ்டைலில் ஒரு கிராமிய சினிமா
படத்தின் துவக்கத்தில் ஒரு பாட்டி தனது பேத்திக்கு ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதைதான் படத்தின் கதை. கம்மாயப்பெட்டின்னு ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் மலையில் தோன்றும் சாமி அவர்களுக்கு வேர். அந்தச் சாமியை வைத்து அந்த ஊருக்குள் இரு பிரிவு ஏற்படுகிறது. அதில் ஒரு பிரிவினர் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவும் மறு பிரிவினர் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் பிரிவில் ஹீரோ அர்ஜுன் தாஸும் காளி வெங்கட்டும் இருக்கிறார்கள். சின்னச் சின்ன விசயங்களுக்கும் வெட்டுக் குத்து என இறங்கும் அந்த ஊர் மிகவும் பின் தங்கியுள்ளது. அதை மாற்ற காளிவெங்கட் போராடுகிறார். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியில் அவருக்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பயணிக்கும் திரைக்கதை தான் மீதிப்படம்
அர்ஜுன் தாஸ் மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியுள்ளார். மிகவும் சாப்டான அவரது கேரக்டர் ட்ரான்ஸிஸ் ஆகும்போது அவரது எலிவேசன் பெர்பாமன்ஸ் அட்டகாசமாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. காளி வெங்கட்டிற்கு வேறலெவல் ஆக்டிங் ஸ்கோப் உள்ள படம் இது. மனிதர் பின்னியிருக்கிறார். அபிராமி நாசர் உள்ளிட்டவர்கள் சின்னதாக என்ட்ரி போட, சிங்கம்புலி கிச்சா ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள். நாயகி கேரக்டரை இன்னும் ஸ்ட்ராங்காக எழுதியிருக்கலாம். TSK கேரக்டரும் அவரது நடிப்பும் பாஸ்மார்க்
படத்தின் லேன்ஸ்கேப் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு லோகேசனையும் கூடுமானவரை பேரழகோடு காட்டியிருக்கிறார் கேமராமேன். டி.இமான் பாடல்களை விட பின்னணி இசையை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார். எடிட்டர் இன்னும் கொஞ்சம் படத்தை ஷார்ப் செய்திருக்கலாம்
இரண்டு கிராமங்களை ஒன்றிணைக்கும் போராட்டம் தான் படம். இந்த ஒரு புள்ளியில் திரைக்கதை நின்று விடுவதால் அடுத்தடுத்த சம்பவங்களில் பெரிய சுவாரஸ்யம் எதுவுமில்லை..கதையும் அதன் களமும் புதிது என்ற வகையில் மட்டுமே படம் ஈர்க்கிறது. காமெடி காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் இந்தப் பாம் காமெடி ஆட்டோபாமாக வெடித்திருக்கும்
2.75/5
-வெண்பா தமிழ்

