2026-ல் விஜய் முதல்வர் என ட்ரைலர் வெளியீட்டு டெரர் காட்டியது யாதும் அறியான் பட டீம். படம் எப்படி இருக்கிறது?
தினேஷ் & பிரானா
ஆனந்த் பாண்டி & ஷியாமல் இந்தக் காதல் ஜோடிகள் காட்டுப்பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கு சமையல்காரராக அப்புக்குட்டி இருக்கிறார். நால்வரில் ஒருவரை தினேஷ் கொலை செய்துவிடுகிறார். அந்தக் கொலையும் அதன் காரணமும் தான் படத்தின் கதை
தினேஷ் ஓரளவு நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார். ஆனந்த் பாண்டி தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். நாயகிகள் பிரானா ஷியாமால் ஓரளவு கதையின் தேவை உணர்ந்து நடித்துள்ளனர். அப்புக்குட்டி ஒகே ரகம்
ஒளிப்பதிவாளர் தனக்குக் கொடுக்கப்பட்ட லைட்டிங் பட்ஜெட்-ஐ வைத்து சிறப்பாக பணியாற்றியுள்ளார். இசை அமைப்பாளர் பாடல்களை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். பின்னணி இசை ஒகே
கொலைகளும் அதன் தொடர்ச்சியாக கனவுகளும் என பயணிக்கும் படம் ரசிகர்களுக்கு எந்த சுவாரஸியத்தையும் தரவில்லை. திரைக்கதையில் இன்னும் இயக்குநர் அறியாத விசயம் நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் அதைச் சரிவர செய்வார் என நம்புவோம்
2.25/5
-வெண்பா தமிழ்

