ஒரு கச்சிதமான வெப்தொடரை படைத்து வெற்றி கண்டுள்ளது பிரசாந்த் பாண்டிராஜ் & விக்னேஷ் நடராஜன் கூட்டணி
தன் மகன் பிரசாந்த் பாண்டிராஜ் ஏதேனும் ஒரு அரசு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என மன்றாடுகிறார் பாலாஜி சக்திவேல். ஆனால் எழுதும் எல்லா எக்ஸாமிலும் கோட்டைவிடுகிறார் ஹீரோ பிரசாந்த் பாண்டிராஜ். தேர்வில் வெற்றிபெற முடியாத கடுப்பிலிருக்கும் ஹீரோவை காளிவெங்கட் போலீஸ் ஆக்கிவிடுகிறார். அப்பாவியான ஹீரோ போலீஸ் வேலையில் சேர்ந்து நிறைய தடுமாற்றங்களைச் சந்திக்கிறார். அதன்மூலம் உயரதிகாரிகளால் அவமானப்படுத்தவும் படுகிறார். அவமனாம் பெருக பெருக உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டு அமைதியான அவர் அதிதீவிரமான குணம் கொண்டவராக அவதாரம் எடுக்கிறார். கைதிகளை அவர் கையாளும் விதம் அடிப்பொலி ரகமாக இருக்கிறது. கிண்டல் செய்த காவல்துறை அவரை பிரமிப்பாகப் பார்க்கிறது. ஒரு கட்டத்தில் அவரின் கொடூர நடவடிக்கை அவருக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. அது என்ன? அதிலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பது சீரிஸின் மீதிக்கதை
உடலுக்கேற்ற சட்டை போல கேரக்டருக்கேற்ற நடிப்பைப்பக்காவாக கொடுத்துள்ளார் ஹீரோ பிரசாந்த் பாண்டிராஜ். பாலாஜி சக்திவேல் காளிவெங்கட் இருவரும் தங்களின் இயல்பை மீறாத நடிப்பால் நம்மை ஈர்க்கிறார்கள். அருள்தாஸ், அருள்ஜோதி உள்ளிட்ட பிற கேரக்டர்களும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்
சாம் சி.எஸ் டெக்னிஷியன்களில் மேன் ஆப் தி மேட்ச் வாங்குகிறார். ஆகச்சிறப்பான பின்னணி இசை. ஒளிப்பதிவை அசோக்குமார் திறம்பட கையாண்டுள்ளார். சிறைக்குள்ளே சுற்றும் கேமராவில் கூட எத்தனை எத்தனை நல்ல ஷாட்ஸ்!
சிறைத்துறை ஒரு அப்பாவி போலீஸை உளவியல் ரீதியாக எப்படி மாற்றுகிறது என்பதை எந்தச்சமரசமும் இன்றி பேசியிருப்பது சூப்பர். மேலும் இன்வெஸ்டிகேசன் காட்சிகளில் பெரிய மெனக்கெடலைப் போட்டுள்ளார்கள். அதனால் தான் எல்லா இன்வெஸ்டிகேசன் காட்சிகளும் இன்ட்ரெஸ்டாக இருக்கிறது. நிச்சயமாக நல்ல வெப்சீரிஸ்! நம்பி நேரத்தைச் செலவிடலாம்
3.5/5
-வெண்பா தமிழ்

