ஒரு சிங்கம் இரு வேங்கை இணைந்து திரை வேட்டையாடியுள்ள ப்ளாஸ்ட் எப்படி இருக்கு?
கராத்தே மாஸ்டரானா அர்ஜுன் தன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதிலே கராத்தே சொல்லித்தருகிறார். மேலும் நம் எதிரில் யார் பாதிக்கப்பட்டாலும் தட்டிக்கேட்கணும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார். அதை வேதவாக்காக எடுத்து வளரும் ப்ரீத்தி தவறு யார் செய்தாலும் போட்டுப்பொளக்கிறார். அம்மாவான அபிராமிக்கு இதில் உடன்பாடில்லை. இவர்கள் பேமிலி ட்ராவல் இப்படிச்செல்ல, இன்னொரு பக்கம் 7000 கோடி ரூபாய் லாபத்திற்காக ஒரு மலைக்கிராமத்தையே சூறையாடும் வேலையில் இறங்குகிறார் வில்லன். அந்த வில்லன் டீமிலுள்ள ஒருவருக்கும், அர்ஜுன் மகளுக்கும் ஒரு பஞ்சாயத்து வருகிறது. அது அப்படியே தொட்டுத்தொட்டு பெரிதாக வளர, முடிவில் அர்ஜுன் பேமிலி எடுத்த ஆக்சன் அவதாரம் என்னவானது? என்பதாக படத்தின் திரைக்கதை தடதடக்கிறது
அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மூவரும் நடிப்பதை விட, அடிப்பதை தான் அடிப்படையாகச் செய்துள்ளனர். மூவரும் ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளனர். ப்ரீத்தி முகந்தன் போட்டுள்ள எபெக்ட் அட சொல்ல வைக்கிறது. 40 வயதை கடந்த அபிராமி காட்டியுள்ள ஆக்சன்லாம் வேறரகம். இந்தப்பேமிலியில் ஒருவராக வரும் விவேக் பிரசன்னாவும் மிரட்டியுள்ளார். ஜான் கொகேன் வில்லத்தனம் ஜனஜோர்
இசை அமைப்பாளர் ரவிபசூர் பின்னியெடுத்துள்ளார். பல கேரக்டர்களுக்கு பில்டப் இசையை ஒலிக்கவிட்டுள்ளார். படத்தின் ஆக்சன் காட்சிகளை அவரின் இசை அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றுள்ளது. அசோக் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவை கச்சிதமாகச் செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை வடிவமைத்த பீனிக்ஸ் பிரபு தான் இந்த டெக்னிஷியன்ஸ் டீமின் பெஸ்ட் ஆட்டக்காரர். மனிதர் வேறலெவலில் ஆக்சன் கொரியோகிராபி செய்துள்ளார்
ஒரு சாதாரண பேமிலிக்குள் பெரிய சம்பவக்காரர்கள் இறங்கினால் என்ன நடக்கும் என்பதையும், சாதாரண பேமிலுக்குள் பெரிய சம்பவக்காரர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் திறமையான திரைக்கதையால் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் சுபாஸ் கே ராஜ். படத்தில் சின்னதாக வரும் ஒரு கேரக்டருக்கு கூட நச் என ஒரு லீட் கொடுத்து அசத்தியுள்ளார். மேக்கிங்கும் அபாரம். முன்பாதியில் ஒரு பத்துநிமிடத்தை வெட்டியிருக்கலாம். நிச்சயமாக எடிட் செய்ய வேண்டிய காட்சிகள் நமக்கே தெரிகின்றன
இரண்டாம் பாதி படம் பட்டாசாக பறக்கிறது. சர்வ நிச்சயமாக இந்தப்படம் இந்த லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்தச் சம்மரில் டல்லடித்த தமிழ்சினிமாவுக்கு கருப்புக்கு அடுத்து AGS நிறுவனமும் ஒரு ஹிட் கொடுத்துள்ளது
3.25/5
-வெண்பா தமிழ்

