குறைந்த முதலீட்டில் ஒரு விறுவிறு ஆக்சன் திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் ஷங்கர் சாரதி
பெரு நகரத்தில் தொடர்கொலைகள் நடப்பது தொடர்கதையாக இருக்கிறது. போலீஸ் டிப்பார்ட்மெண்ட் குற்றவாளியைக் கண்டுபிடிக்க பெரும் கவனம் எடுத்து செயல்படுகிறது. திடீரென குற்றவாளி என ஒருவரை போலீஸ் கைது செய்கிறது. ஆனால் அதன்பின்னும் கொலைகள் நடப்பது நிற்கவில்லை. அப்படியெனில் நிஜக்குற்றவாளி யார்? இதில் படத்தின் நாயகன் ஹீரோ எப்படிச் சம்பந்தப்படுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை!
நாயகன் சேத்தன் சீனு அழகாக இருக்கிறார். நன்றாக சண்டையும் செய்கிறார். நடிப்பதில் இன்னும் அவருக்குப் பயிற்சி தேவை. ஆஷ்னா சாவேரி பேரழகோடு இருக்கும் நடிகை. இப்படத்தில் டல்-ஆக இருக்கிறார். சாய் தீனா மிரட்டுகிறார். மனோபாலா கிச்சுகிச்சு மூட்ட ட்ரைப்பண்ணுகிறார். பிரேம்குமார் மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பிற நடிகர்கள் எதோ ஒப்பேற்றியுள்ளனர்
சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்சன் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. அஷ்வத் இசையமைத்துள்ளார். ஒரு ஆக்சன் திரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியுள்ளார்.
ஒரு பரபர ஆக்சன் திரில்லருக்கான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ஷங்கர் சாரதி திரைக்கதையை வலுப்படுத்தி இருக்கலாம். பல இடங்களில் படம் டல்லடிக்கிறது. சில காட்சிகள் புல்லரிக்க வைப்பதும் மறுப்பதற்கில்லை. லாஜிக் லேக் இருந்தாலும் எனக்கு ஆக்சன் இருந்தால் பிடிக்கும் என்பவர்கள் வள்ளுவனைத் தேர்ந்தெடுக்கலாம்
2.75/5
#Valluvan_movie

