வாத்தியார் என்றால் எம்.ஜி.ஆர் என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால் எம்.ஜி.ஆர் என்ற கான்செட்-ஐ வைத்து பேண்டஸி முறையில் வா வாத்தியாரை உருவாக்கி இருக்கிறார் நலன் குமாரசாமி
அதி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண் தனது பேரனான கார்த்தியை எம்.ஜி.ஆர் போலவே வளர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் வளரும் போதே கார்த்தி நம்பியாராக வளர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரான அவர் காசுக்காகவும் கூட சில தீங்குகளை செய்கிறார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் ஆன்மா அவருக்குள் புகுந்துகொள்கிறது. அதன்பின் நம்பியாரை தனக்குள் வைத்திருந்த கார்த்தி எம்.ஜி.ஆராக மாறி என்னென்ன செய்தார் என்பதே படத்தின் கதை
கார்த்தி உடல் அளவில் தன்னை கச்சிதமாக வைத்துள்ளார். அந்நியன் சேடோவ் வரும் காட்சிகளைத் தவிர்த்து ஏனைய காட்சிகளில் நன்றாகவே கவனம் ஈர்க்கிறார். ஷில்பா மஞ்சுநாத் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். கீர்த்தி ஷெட்டியும் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார். ஆனந்த் ராஜ் கேரக்டர், சத்யராஜ் கேரக்டர் இரண்டும் ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது. ரமேஷ் திலக்கின் கேரக்டர் வடிவம் இன்னும் ஸ்ட்ராங்காக அமைந்திருக்கலாம்
ஜார்ஜ் ஒளிப்பதிவு பணியைச் செய்துள்ளார். நலன் குமாரசாமிக்கென இருக்கும் லைட்டிங் ஸ்டைலை இந்தப் படத்திலும் அப்ளே செய்துள்ளார் ஜார்ஜ். சந்தோஷ் நாராயணன் போர் அடிக்காத இசையால் சிக்ஸ் அடித்துள்ளார் எனலாம்
வெரி வெரி இன் ட்ரெஸ்டிங்கான ஒன்லைனைப் பிடித்துள்ளார் இயக்குநர் நலன் குமாரசாமி. அதை இன்னும் தனது முந்தைய படங்கள் தந்த காமெடியோடு தந்திருக்கலாம். இருந்தாலும் ஆங்காங்கே வரும் எம்.ஜி ஆர் பாடல்கள், நடிகர்களின் கேரக்டர்கள் எல்லாம் உங்களை ரசிக்க வைக்கலாம்
2.75/5
-:வெண்பா தமிழ்

