பிரபாஸ் நடித்த பேய்& சாமி படம் தான் இந்த ராஜாசாப். ஆக லாஜிக் பார்க்காதீக
சஞ்சத் தத் ஹீரோ பிரபாஸோட தாத்தா..அந்தத் தாத்தா தொலைஞ்சி போயிடுறார். அதனால பாட்டி கலக்கம் அடைஞ்சி மறதி நோயால் வாடுறாங்க. பாட்டி நோயைத் தீர்க்க தாத்தாவைத் தேடி பிரபாஸ் பயணிக்கிறார். அப்புறம் தான் தெரியுது தாத்தா ஆல்ரெடி செத்துட்டார்னு. அதேநேரம் அவர் பேயாக வந்து பெரும் கொடைச்சலைக் கொடுக்கிறார். அதன் பின்னணியில் ஒரு நீண்ட கதை உண்டு. அந்தக் கதையின் முடிவு தான் மீதிப்படம்
கேட்ட அளவை விட. எக்ஸ்ட்ராவாகவே நடித்துள்ளார் பிரபாஸ். காதல் காட்சிகளில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தியுள்ளார். மாளவிகா மோகனன் காட்டிய ஏராளமும், நிதி அகர்வால் காட்டிய தாராளமும் ஜென்ஸிகளுக்கு பூட்ஸாக இருக்கலாம். போதாதென்று ரிதுகுமார் வந்து க்ளாமர் இம்சை தருகிறார். சஞ்சத் தத் காட்டும் டெரர் பக்காவாக இருந்தாலும், அந்தக் கேரக்டர் ஆர்க் இன்னும் வொர்க் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுத்திரக்கனி கேரக்டர் ஒகே ரகம். நடிப்பும் அப்படியே
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தின் உச்சம். சில காட்சிகளில் சிஜி வொர்க்கும் பிரமாதம். தமனின் பின்னணி இசை எல்லா எமோஷ்னலுக்கும் க்ளிக் ஆகியுள்ளது. பாடல்களிலும் துள்ளல். பிசிறு தட்டாத ஆர்ட் வொர்க்கும் அசத்தல்
டெக்னிக்கலாக இவ்ளோ சப்போர்ட் இருப்பதால் இயக்குநர் மாருதி கதை திரைக்கதையில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். எமோஷ்னலை போதுமான அளவு கொண்டு வராவிட்டாலும் சில இடங்களில் ஸ்கிரீன்ப்ளே வொர்க் ஆகிறது. ஹீரோயின்கள் கேரக்டர்களை 80-களில் உள்ள ஹீரோயின்கள் போல் டீல் செய்திருப்பது சின்ன வருத்தம். கிறிஸ்தவ ஹீரோயினை இன்னும் மெச்சூட் ஆக யூஸ் பண்ணிருக்கலாம். தமிழ் டப் வசனங்கள் ஒகே. ராஜா காலத்து கதையை ராஜா காலத்து ஸ்டைலிலே சொல்லியிருப்பதில் சின்னதாக என்கேஜிங் இருக்கவே செய்கிறது. அங்கங்கே சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் கடைசி 45 நிமிடம் படத்தைக் காப்பாற்றுகிறது. பேய்படம் பிடிக்கும் என்பவர்களுக்கு ராஜாசாப் நல்ல சாய்ஸ் தான்
2.75/5
-வெண்பா தமிழ்

