சொட்ட சொட்ட நனையுது- விமர்சனம்

வழுக்கைக்கும் வாழ்க்கைக்குமான பிரச்சனையைப் பேசுகிறது படம்

நாயகன் நிஷாந்த் ரூசோவுக்கு ஒரு தவறான மருந்தால் தலையில் முடி கொட்டிவிடுகிறது. கொட்டிய முடிகளை எட்ட முடியாமல் தவிக்கும் அவருக்கு திருமணமும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. எட்டாத லட்டு கிட்டத்தில் வந்தது போல அவருக்கு நாயகி வர்ஷிணி மூலமாக ஒரு ஆபர் வருகிறது. அதை ஹீரோவே மறுக்கிறார். அதற்கான பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை

நாயகன் நிஷாந்த் ரூசோ கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்துள்ளார். சீவ முடியாத தலையால் தன் நடிப்பில் கலை செய்துள்ளார். ரோபோ சங்கர் & கோ காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. நாயகிகள் வர்ஷிணி மற்றும் ஷாலினி இருவரும் தரமான நடிப்பை வழங்கியுள்ளனர்

ஒளிப்பதிவாளர் நிறைய ஷாட்களில் ‘தலை’யாய பொறுப்பைச் செய்துள்ளார். இசை அமைப்பாளர் இன்னும் எனர்ஜி சேர்த்திருக்கலாம்

இயக்குநர் நவீத் எஸ்.பரீத் வழுக்கை இளைஞர்களின் வலியை காமெடியாக பதிவு செய்ய விரும்பியுள்ளார். முடி குறைபாடு ஒன்றும் தலை போகும் விசயமல்ல என்பதைப் பேசியிருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் படத்தில் கமர்சியல் எலிமண்ட்ஸ் எதுவுமே வொர்க் ஆகவில்லை என்பது சோகம்

சும்மா சின்னதாக ஜாலி பண்ண வேண்டுமானால் படத்தைப் பார்க்கலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *