சீதாபயணம்- விமர்சனம்

நன்றி மறப்பது நன்றன்று என்ற கான்செப்டில் பயணிக்கிறது சீதா பயணம்

நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் கல்யாணத்தை விரும்பாத தனிமை விரும்பி. ஒரு பங்ஷனுக்காக சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்கிறார். அப்படி அவர் பயணிக்கும் போது லிப்ட் கேட்டு அவர் காரில் ஏறுகிறார் ஹீரோ நிரஞ்சன். இருவருக்கும் ஒரு நட்பு உருவாகிறது. அவர்கள் வரும் வழியில் சில மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அதனால் ஐஸ்வர்யா செல்ல வேண்டிய இடத்திற்கு சற்று தாமதமாகச் செல்கிறார்..அந்த தாமதம் அவரது உயிரையே காப்பாற்றுகிறது. அதில் நெகிழ்ந்து போகும் ஐஸ்வர்யா தன் தாமதமான பயணத்திற்கு காரணமான அனைவருக்கும் நன்றி சொல்ல ஹீரோவோடு பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் ஏற்படும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா சிற்சில இடங்களில் தடுமாறினாலும் ஓரளவு நல்ல நடிப்பையே தந்துள்ளார். இதே வார்த்தைகளை ஹீரோ நிரஞ்சனுக்கும் சொல்லிக் கொள்ளலாம். சிறப்புத் தோற்றத்தில் அர்ஜுன் அசத்தலாக ஸ்கோர் செய்துள்ளார். பிரகாஷ் ராஜ் பாசிட்டிவான ரோலில் படத்திற்கு பாசிட்டிவ் வைப் கொடுத்துள்ளார்

படத்திற்கு பின்னணி இசை இன்னும் பெட்டராக அமைந்திருக்கலாம். பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவு ஓரளவு ஒகே. ஆனால் சிஜி மிகவும் சுமார்.

மிகவும் நல்லகதையை தேர்ந்தெடுத்துள்ளார் அர்ஜுன். சில காட்சிகளில் இயக்குநராகவும் தனித்துத் தெரிகிறார் அர்ஜுன்..அதேநேரம் ஒரு திரைக்கதை ஆசிரியராக அவர் இன்னும் கிரவுண்ட் வொர்க் செய்திருக்கலாம். பல காட்சிகளில் அமெச்சூர் தன்மை இருப்பதும் மறுப்பதற்கில்லை. இருப்பினும் மனித வாழ்வில் நன்றி மனப்பான்மை ரொம்ப முக்கியம் என்று அழுத்தமாகப் பேசியதற்காகவே இந்த சீதா பயணத்தில் நாமும் கலந்து கொள்ளலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *