ரூம்பாய்- விமர்சனம்

ஒரு சாதா ரூம்பாய் தாதா போல் அவதாரம் எடுக்கும் திரில்லர் கதை

ஹீரோ C நிகில் ஒரு ஓட்டலில் ரூம்பாயாக வேலை செய்கிறார். அந்த ஓட்டலில் சில இல்லீகல் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட கொடுமைகள் நடக்கிறது..அங்கு சிலர் கொல்லப்படுகின்றனர்..கொலைக்கு காரணமானவர் யார் என்று கதை பயணிக்கும் போது, அங்கு ரூம்பாயாக இருக்கும் ஹீரோ தான் கொலை செய்தார் என்று தெரியவருகிறது. அவர் ஏன் கொலை செய்தார்? என்ற கேள்வி எழுகிறது. கேள்விக்கான பதிலில் இருக்கிறது மீதி திரைக்கதை

கதையின் நாயகனாக நிகில் இன்னும் நிறைய தேர்ச்சி பெறவேண்டும். முகத்தில் எக்ஸ்பிரசன் போதவில்லை. கூத்துப்பட்டறை போன்ற அமைப்புகளில் ஆறுமாதம் பயிற்சி எடுத்தால் தேறிவிடுவார். நாயகி ஹர்ஷா கொடுத்த வேலையைச் செய்துள்ளார். அவர் நடிப்பிலுமே இன்னும் எதார்த்தம் கூடிவரவேண்டும். இமான் அண்ணாச்சி, காத்து கருப்பு, பிர்லா போஸ், புகழ் கற்பகம் என ஏனைய நடிகர்கள் அனைவரும் எதோ ஒப்பேற்றியுள்ளனர்

சி.பாரதிராஜன் Dft ஒளிப்பதிவால் படத்தைத் தேற்ற முயற்சித்துள்ளார். கலரிங் வேலைகளில் இன்னும் அவர் கவனம் எடுத்திருக்கலாம். வேலன் சகாதேவனின் பின்னணி இசை கொலை காட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்த உதவுகிறது. பாடல்கள் எதுவும் வொர்க் ஆகவில்லை

பழிவாங்கும் கதை என்றாலும் அதை ரூம்பாய் செய்கிறார் என்ற ஐடியா இன்ட்ரெஸ்டிங் தான். ஆனால் அதை எக்ஸ்கியூட் செய்த விதத்தில் இயக்குநர் ஜெகன் ராயன் ரொம்பவே சொதப்பியுள்ளார். ரூம்பாய் இன்னும் க்ளீன் ஸ்கிரீன்ப்ளேயோடு வந்திருந்தால் கொண்டாடியிருக்கலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *