சர்தார்2- விமர்சனம்

சர்தார் படத்தின் வெற்றியை தக்க வைத்ததா சர்தார் 2?

நாட்டைக்காக்கும் ஹீரோக்களை தமிழ் ரசிகர்கள் எந்தளவிற்கு ஏற்றிருக்கிறார்கள் என்பதை அலசிப்பார்க்க இயக்குநர் மித்ரன் தவறிவிட்டாரோ? என்ற கேள்வியை எழுப்புகிறது சர்தார்2 படத்தின் திரைக்கதை

ஜப்பானின் நாசகார ஆயுதம் ஒன்று இந்தியாவில் லேண்ட் ஆகியுள்ளது. அதை இயக்கினால் பேரழிவு நிச்சயம்..அதைச் செய்வதற்கு வில்லன் எஸ்.ஜே சூர்யா முயற்சிக்கிறார். அதை தடுப்பதற்கு ஹீரோ மகன் கார்த்தி அப்பா கார்த்தி முயற்சிக்கிறார்கள். யார் வென்றார்கள் என்பது மெயின்கதை. இதற்குள் இன்னும் சில லேயர்கள் இருப்பது தனிக்கதை

ஏற்றுக்கொண்ட கேரக்டர்க்காக பேருழைப்பைப் போட்டுள்ளார் ஹீரோ கார்த்தி. அப்பா கேரக்டரில் இன்னும் செறிவை கூட்டியிருக்கலாம். மாளவிகா மோகனன் கேரக்டர் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரும் ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் அசத்தியுள்ளார். எஸ்.ஜே சூர்யா அதே சட்டை அதே வாடகை என்ற லெவலிலே நடித்துள்ளார். நமக்கு அந்த மாடுலேசன் நமநமத்துவிட்டது

ஜார்ஜ் வில்லியம்ஸ் கேரமா இந்தப்படத்தில் பல நூறடி பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. நிறைய ஷாட்களில் ஹாலிவுட் தரத்தைப் பார்க்க முடிகிறது. படத்தின் மற்றொரு பில்லர் இசையமைப்பாளார் சாம்.சி.எஸ்! மனிதர் பின்னணி இசையால் படத்தை முன்னணிக்கு இழுத்து வந்துள்ளார். காட்சிகளால் தரமுடியாத உணர்வுகளை தன் இசையால் தரவைத்துள்ளார். மேலும் சாம்.சி.எஸுக்கு இது 100-ஆவது படம்! வாழ்த்துகள்

அடிப்படைக் கதையிலே ஒரு கனெக்டிவிட்டி இல்லை என்பதால் திரைக்கதையின் ஜிகினா வேலைகள் நம்மை கவரவில்லை. படத்தின் நீளமும் நம்மை ரொம்பவே சோதிக்கிறது. ஒரே ஆறுதல் டெக்னிக்கலாக படம் மிரட்டுகிறது. அந்த ஒரு அம்சத்தை முன் வைத்து வேண்டுமானால் தியேட்டருக்குச் செல்லலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *