சைத்யபூமி- நூல் விமர்சனம்

தாம் வாழும் நிலப்பரப்பின் அழகியலை எழுதுவதை விட, அந்நிலத்தின் அரசியலை எழுதுவது அவசியம். அந்த உந்துதலே சகோதரி புதியமாதவியை இந்நூலை எழுத வைத்திருக்கும் என்றெண்ணுகிறேன்

மராட்டிய மாநிலத்தின் தலித் அரசியலையும், அதற்கு நேரெதிராக நடத்தப்பட்ட அரசியலையும் சிலரின் தனி மனித வரலாறுகளோடு எழுதியுள்ளார் புதியமாதவி

சிவசேனா அமைப்பு குறித்து எழுதியுள்ள கட்டுரை வீரியமிக்கது. பால் தாக்கரே இந்தித் தேசியத்தின் மீது கொண்டிருந்த பிடிப்பையும், அதற்காக அவர் கட்டமைத்த வன்முறைகளையும் திறம்பட எழுதியுள்ளார். தற்போது சிவசேனா அமைப்பு வாக்கரசியலின் நோக்கத்தால் வேறு வடிவம் எடுத்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இன்று சிவசேனா கட்சியின் பதவிகளில் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது மாற்றத்தின் ஒரு பகுதி. பன்மைத்துவத்தை ஏற்பதே மானுட வாழ்விற்கான வழி அல்லவா?!

திராவிட இயக்கங்களின் சாதி எதிர்ப்பு வேசத்தை மிகச்சரியாக ஒரு கட்டுரையில் மதிப்பிட்டுள்ளார்.

“பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே சாதிய எதிர்ப்பாக காட்டும் போக்கு திராவிட இயக்கத்தையும் தலித்திய இயக்கத்தையும் பிரிக்கும் கண்ணுக்குத் தெரியாத கோடு” என்ற புதியமாதவியின் வரிகள் நடைமுறை அரசியல் சான்று

ஓட்டு அரசியல் எதையும் ஏற்கும், எதற்கும் ஏந்தும் தானே?!

கருத்துக்களை கையாண்ட விதத்தைப் போலவே, எழுத்து நடையில் இன்னுமே வீரியத்தைக் கூட்டியிருக்கலாம். மற்றபடி Good one தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *