“பொறந்த வீட்டை விட்டு புருசன் வீட்டுக்கு பொண்ணுதான் போகணுமா? பொண்ணு வீட்டுக்கு மாப்பிள்ளை வரக்கூடாதா?” இந்த கேள்வி தான் படத்தின் ஒன்லைன்
மாஸா ஒரு லவ் பண்ணி கல்யாணம் பண்ணணும் என்பது ஹீரோ இளனின் டார்கெட். அதற்கேற்றாப் போல் ஜோடியாக வருகிறார் நாயகி சான்வி மேக்னா. இருவரும் காதலாகி கசிந்துருகி கல்யாணத்திற்கு ரெடியாகிறார்கள். But கல்யாணத்தன்று தாலியை ஏற்றுக்கொண்ட பின் ஓடுகிறார் நாயகி சான்வி. Why என்ற கொஸ்டினுக்கு பின்பாதி படம் ஆன்சர் சொல்கிறது
அறிமுக ஹீரோவாக இளன் சில இடங்களில் பாஸ்மார்க் வாங்குகிறார். சில இடங்களில் பாஸ்- ஆக வேண்டும். அடுத்தடுத்த படங்களில் ஆகிவிடுவார் என நம்புவோம். படத்தில் வேறலெவலில் ஸ்கோர் பண்ணுகிறார் சான்வி மேக்னா. அழகும் நடிப்புமாக ஜென்ஸியர் மனதில் அமர்கிறார். ராதிகா சரத்குமார் வழக்கம் போல அதகளப்படுத்தியுள்ளார். எம்.எஸ் பாஸ்கர், கீதா கைலாசம், செந்தில் ஆகியோருக்கு இன்னும் ஸ்கிரீனில் டைம் கொடுத்திருக்கலாம். யோகிபாபு கேரக்டரும் நடிப்பும் சிறப்பு
தினேஷ் கே பாபு சிறந்த விஷுவலை கொடுத்துள்ளார். அவரின் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல மைலேஜ். படத்தின் இன்னொரு பாசிட்டிவ் அம்சம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. பாடல்கள் RR இரண்டுமே டாப்
முன்பாதி கலகலவென நகர்கிறது திரைக்கதை. குறிப்பாக முதல்வன் பட நேர்காணல் காட்சியை இமிடேட் செய்து எடுக்கப்பட்ட காட்சி அல்டிமேட். வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதையில் பணியாற்றியுள்ள ஹரிஷ் இயக்குநர் இளனோடு இணைந்து இரண்டாம் பாதியை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். ஒரே இடத்தில் சுற்றும் திரைக்கதையும், திரும்ப திரும்ப ஒரே டோனில் வரும் காட்சிகளும் கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது
ஆண் பெண் இருவருக்கும் எல்லாவிதமான எமோஷ்னலிலும் சரிவிகிதம் வேண்டும் என்ற கருத்தை வலிமையாகப் பேசியதிற்காக இந்த கல்யாணத்திற்கு நெட்பிளிக்ஸில் கிப்ட் வைக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

