ஜென்ஸியர் மட்டுமல்லாமல் 90’s 80’s கிட்ஸுக்கும் பிடித்த நடிகை நயன்தாரா
நீண்ட நாட்களுக்குப் பின் அவர் ஒரு பேமிலி படத்தில் நடித்துள்ளதால் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அதை நேற்று வெளியான ட்ரெய்லரும் உறுதி செய்துள்ளது
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஹாய்’
காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது.
குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன.
மேலும், மறைந்த இயக்குநர் நடிகர் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனுபவம் மிக்க திரை ஆளுமைகளின் அட்டகாசமான நடிப்பும் டிரெய்லரில் கவனம் பெறுகிறது. அதேபோல், கவின் – நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

