பனிவிழும் இரவு- விமர்சனம்

கவிதை போன்ற தலைப்பிலே கவனத்தை ஈர்க்கிறது படம்! மொத்தமாக இந்த இரவிற்குள் ரசிகர்களை கொண்டு வருமா படம்?

திரில்லர் மிஸ்டரி படத்தின் கதைகளை விவரிப்பது படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சாபம் கொடுப்பது மாதிரி. ஆனாலும் சின்னதாக ஒன்லைனைச் சொல்லிவிடுவோம்

மலைபிரதேசம் ஒன்றுக்கு வருகிறது ஒரு ஜோடி. அவர்கள் எதிர்பார்க்காத சம்பவங்கள் நிகழ்கிறது. அவை அனைத்தும் ஒரே இரவில் நிகழ்கிறது. விடியும் பொழுது யாருக்காக விடிகிறது என்பது படத்தின் கதை

கதையின் நாயகனாக அருண் கார்த்தி நன்றாக கவனம் ஈர்க்கிறார். இயல்பான நடிப்பு அவரிடம் வெளிப்பட்டுள்ளது. நாயகி எனாக்க்ஷி கங்குலி கொடுத்த வேலைக்கு குறை வைக்காத நடிப்பைத் தந்துள்ளார். மேலும் கருப்பு நம்பியார், சேரன்ராஜ், சரவண சக்தி, செ.ரா.ராஜேஷ், கஜராஜ் உள்ளிட்ட இன்னபிற கேரக்டர்கள் கதைக்கேற்ற தேர்வு

ஒளிப்பதிவாளர் திரு.ஜெயக்குமார் தங்கவேல் தரமான விஷுவலை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் சதாமுருகன் சாதா இசையாக இல்லாமல் திரில்லர் மூட்-ஐ செட் செய்யும் ஸ்பெசல் சாதா இசையைத் தந்துள்ளார். எடிட்டிங்-ஐ இன்னுமே ஷார்ப் செய்திருக்கலாம்

செ.ரா.ராஜேஷ் கதை திரைக்கதையில் நன்றாக மெனக்கெட்டுள்ளார். மேக்கிங்கில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். இருந்தாலும் பெரிய குறைகள் இல்லை. சின்னச் சின்ன குறைகளை மன்னிக்கும் குணம் உள்ளவர்கள் இந்த பனிவிழும் இரவிற்குள் செல்லலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *