செம்மரக்கடத்தல் பின்னணியில் ஒரு கமர்சியல் சினிமா
சீக்ரெட் ஆபிசர் தனுஷ் செம்மரக்கடத்தலின் ராஜாவான மம்முட்டியிடம் எமோஷ்னலாக தம்பி போல இணைகிறார். அங்கிருந்து பல தகவல்களை IPS ஆபிசர் சாய் பல்லவிக்கு அனுப்பி வைக்கிறார். இங்கிருந்து ஓம் ஆபரேசன் துவங்குகிறது. இதற்கிடையில் மனைவி ஸ்ரீலீலா, அப்பா இந்திரன்ஸ், மற்றும் ஒரு மகன் ஆகியவர்களோடு ஒரு தனி ட்ராக்கிற்கும் தனுஷுக்கு உண்டு. இடைவேளைக்குப் பின் சட்டத்திற்கும் எளிய மக்களின் வாழ்வுக்குமான போராட்ட.மாக மாறி, பின் வேறோர் யூ-டர்ன் அடிக்கிறது படம்!
சீக்ரெட் ஆபிசராக, மனிதாபிமான நிறைந்த இளைஞராக, அப்பாவாக, மகனாக, கணவராக என பல பரிணாமங்களில் அசத்தியுள்ளார் தனுஷ். ஆக்சனிலும் டான்ஸிலும் வழக்கம் போல அசுரப்பாய்ச்சல்! சாய்பல்லவி பின்னியெடுத்துள்ளார். அவரது கெட்டப்-க்கே ரசிகர்கள் ஹார்ட்டீன் விடுவார்கள். மம்முட்டி கேரக்டரை இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம். மிகவும் வீக்கான கேரக்டர் மம்முட்டிக்கு. ஸ்ரீலீலா வழக்கமான ஹீரோயின் மெட்டிரியல். இந்திரன்ஸ் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்.
எழிழரசு தனது கேமராக் கண்களால் தரமான விஷுவல் விருந்து படைத்துள்ளார். இருள் நிறைந்த என் கவுண்டர் காட்சிகளின் கேமராக் கோணங்கள் நம் மனதை பிசைகிறது. சாய் அபயங்கர் இசையில் தனி ஆவர்த்தனம் நடத்தியுள்ளார். “ஆல்டைம் அன்பாயிருப்போம்” ரசிகர்களுக்கு ஆல்டைம் பேவரைட்
வலிமிகுந்த ஒரு கதையை கையிலெடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அதில் நிறைய கமர்சியல் கலந்துள்ளார். படத்தின் ஸ்லோவான கதை சொல்லல் முதல்பாதியிலே நம்மை டயர்ட் ஆக்குகிறது. பின்பாதியில் எமோஷ்னல் ஓரளவு வொர்க்கவுட் ஆகிறது. வில்லன்களின் கேரக்டர்களிலுள்ள பலவீனம் படத்தை பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. அதனாலே ஹீரோவின் வேகம் கோபம் எடுபடவில்லை
ஓம்- தனுஷ் ரசிகர்களுக்கு ஒகே
3/5
-வெண்பா தமிழ்

