அப்பாகுட்டி- விமர்சனம்

அப்பா செண்டிமெண்ட் பட வரிசையில் ஒரு வித்தியாசமான முயற்சி இந்த அப்பா குட்டி

தனது மகளின் வாழ்வுக்காக எந்தத் துணையுமற்ற விஜய் ஆண்டனி ஊட்டியில் மகளோடு வாழ்கிறார். மகளுக்கு திடீரென பெருநோய் இருப்பது தெரிகிறது. அதன் ட்ரீட்மெண்டுக்காகச் செல்கையில் தான் அந்தக் குழந்தை விஜய் ஆண்டனியின் குழந்தை இல்லை என தெரியவருகிறது. மேலும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமானால் குழந்தையின் உண்மையான பெற்றோர் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவாகிறது. ஆனால் குழந்தையின் பெற்றோர் பிரிந்து வேறுவேறு திருமணம் செய்து கொண்டவர்கள். குழந்தையின் உயிரைக்காப்பாற்ற விஜய் ஆண்டனி குழந்தையின் பெற்றோரிடம் மன்றாடுகிறார். முடிவில் விஜய் ஆண்டனியின் பாசப்போராட்டம் வென்றதா என்பதே மீதிக்கதை

விஜய் ஆண்டனி அப்பாவாக அநேக இடங்களில் ஈர்க்கிறார். அவரின் இயல்பான சாந்தமுகம் பல காட்சிகளை எலிவேட் பண்ணி உதவுகிறது. ப்ரீத்தி அஸ்ராணி கதையில் மிக முக்கியமான பங்கை ஆற்றியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக வரும் சிறுமி சிறப்பாக நடித்துள்ளார். அருவி மதன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பிற நடிகர்கள் எல்லோரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்கள்

இசைஞர் விஜய் ஆண்டனி வழமை போல் அருமையான இசையை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் கூடுமானவரை நல்ல நல்ல ஷாட்களை வைத்துள்ளார்

மிகவும் சிக்கல் நிறைந்த கதையை மிகத்திறமையாக கையாண்டுள்ளார் இயக்குநர் மு.மாறன். முன்பாதி வரை எமோஷ்னலற்ற திரைக்கதை சற்று நம்மை சோர்வடையச் செய்தாலும், பின்பாதி திரைக்கதையை தரமாக நகர்த்தியுள்ளார். பாவமறியா ஒரு உயிருக்கு முன் மற்ற எந்த நியாயங்களும் தேவையில்லை என்ற அறம் நம்மை வெகுவாக ஈர்ப்பதால் இந்த அப்பாகுட்டிக்கு ஒரு ஹார்ட்டீன் விடலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *