வெகுநாட்களுக்கு ஒரு கோர்ட் டிராமா
கோவையைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு பெரிய வழக்கறிஞராகவேண்டும் என்பது கனவு. ஆனால் அவரின் அப்பாவும் கணவர் தீபக்கின் அம்மாவும் பெண் என்றால் வீட்டோடு இருக்க வேண்டும் என கண்டிசன் போடுகிறார்கள். ஆனால் கணவர் தீபக் கீர்த்தி சுரேஷை வழக்கறிஞர் வேலைக்கு அனுப்புகிறார். மிஷ்கினிடம் ஜுனியராக பணிக்குச் சேர்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன்பின் வழக்கமான சினிமா போல குருவை எதிர்த்து சமர் செய்கிறார் நாயகி. அதுவும் தன் கணவருக்காக. முடிவில் யார் வென்றார் என்பது கதை
கதையின் நாயகியாக படத்தை தன் சோல்டரில் தாங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். எமோஷ்னல் மற்றும் காமெடி காட்சிகள் இரண்டிலும் பின்னியெடுத்துள்ளார். மிஷ்கின் வழக்கம் போல பல காட்சிகளில் ப்ளாஸ்ட் செய்துள்ளார். கணவராக வரும் தீபக் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். பால சரவணன் கொடுத்த வேலையை ஆகச்சிறப்பாகச் செய்துள்ளார்
சாம்.சி.எஸ் பாடல்கள் பின்னணி இசை இரண்டிலுமே அசத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் குறுகிய லொக்கேசனில் நடக்கும் காட்சிகளை கூட இன்ட்ரெஸ்டிங்கான ஷாட்களால் அழகாக்கியுள்ளார்
ஒரு தியாகத்தில் உருவாகும் உறவு ஒரு துரோகத்தில் உடையும் போது ஏற்படும் வலியை இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் பதிவு செய்துள்ளார் . மேலும் வக்கீல் தொழிலிலுள்ள எமோஷ்னல் தன்மையற்ற செயல்களை இயக்குநர் சரியாகக் காட்டியுள்ளார். ஆனால் படத்தில் குற்றம் செய்தவர்கள் மீது நமக்கு பெருங்கோபமோ, பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாபமோ நமக்கு வரவில்லை. ரைட்டிங்காக மிகவும் வீக் பாயிண்ட் இது. சிலபல இன்ட்ரெஸ்டிங்கான கோர்ட் காட்சிகள் மட்டும் படத்தைக் காப்பாற்றுகிறது
3/5
-வெண்பா தமிழ்

